Sunday, September 24, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 22.6.17 வியாழன் அன்று புதுகை UNWO சார்பாக காசிம்புதுப்பேட்டை ஊ.ஒ.நடுநிலை ப்பள்ளி 68 மாணவர்களுக்கு ரம்ஜானை முன்னிட்டு வன்ன ஆயத்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலர் திரு. செல்லத்துறை, வ.வளமை வள அலுவலர் முத்தழகு, ஆசிரியர்கள், ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர் கள் கலந்து கொண்ட னர். புத்தாடைகள் வழங்க அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வண்ண ஆயத்த ஆடைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருவரங்குளம் ஒன்றிய உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் செல்லத்துரை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செந்தில்வடிவு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு புதுக்கோட்டை ஐக்கிய நலக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். டி. பஷீர் அலி அவர்களால் வண்ண ஆயத்த ஆடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள் , இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சின்னத்துரை, இளங்கோ, தியாகு, சத்யபூரணி, திருமங்கை, கீதாலெட்சுமி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.







Image may contain: 6 people, people sitting and crowd

Image may contain: 3 people, people on stage