Wednesday, September 05, 2018

காசிம் புதுப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாசிப்பு முகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.  இன்று 31.8.18  காசிம் புதுப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொறுப்பு ஏற்றவுடன் நடக்கும் முதல் விழா.  நமது பள்ளி  மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் இனைந்து நடத்திய வாசிப்பு முகாம் சிறப்பாக நடந்தது.  இதில்  நான் தலைமை தாங்க ஆசிரியர் தியாகு வரவேற்றார்,  சிறப்பு விருந்தினராக   தமிழ் நாடு       அறிவியல் இயக்கத்தின் மாநில  செயலாளர் பாலகிருஷ்ணன்,  மாவட்ட தலைவர் மனவாளன், மாநில துணை செயலாளர் சதாசிவம்,  த.மு.இ.க.சங்கத்தின்  மாவட்ட தலைவர் ரமா. ராமநாதன்,  திருவரங்குளம்    ஒன்றிய  தலைவர் S.A. கருப்பையா,  செயலாளர் சசிகுமார்  , தாய் தமிழ் பள்ளி ராஜா,  நாராயணன்,  ஜமாஅத் தலைவர்,   ஆசிரியர்கள்,  பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மற்றும்   ஜமாஅத்தாரர்களின் பெரும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்த      வாசிப்பு முகாமில் 40 மாணவர்கள் கலந்து கொண்டு வாசித்து  அசத்தினார். ஆசிரியர்  சின்ன துரை நன்றி கூற விழா சிறப்பாக      நடந்தது.  மாநில மற்றும்      புதுக்கோட்டை  மாவட்ட   அறிவியல் இயக்கம்,  ஒன்றிய அறிவியல் இயக்கத்தின் தோழர்களுக்கு நன்றி.    எல்லா புகழும் இறைவனுக்கே. இறைவனுக்கு நன்றி