Thursday, October 26, 2023

25.10.2014 நாணயவியல் கழகம் துவங்கியது

இன்று புதுக்கோட்டையில் புதியதாக  நாணயவியல் சங்கம் என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தொடர்பான கூட்டம் பாலா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. பாலா ட்ரேடிங் ஹவுஸ் செல்வா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். புதுகை நாணயவியல் சங்கத்தின் தலைவராக எஸ்.டி.பசீர் அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராகதிரு  செல்வக்குமார் அவர்களும் இணைச்செயலாளராக செ.சுவாதி மற்றும் ஒ.கோபாலகிருஷ்ணன் அவர்களும் பொருளாளராகதிரு பஹ்ருதீன் மஸ்தான்அவர்கள், துணைத் தலைவராக திரு ரமேஷ்குமார், கெளரவத் தலைவர் மற்றும் ஆலோசகராக திரு ராஜாமுகம்மது அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வருட உறுப்பினராக இணைத்துக்கொள்ள ரூபாய் 50 ம் வாழ்நாள் உறுப்பினராக ரூபாய்500ம் வசூலிக்கத் தீர்மானனிக்கப்பட்டது. இந்த அமைப்பினை அரசின் விதிப்படி பதிவு செய்தல் எனவும் மேற்படி அமைப்பின் விழாவை டிசம்பர் மாதக் கடையில் வெகுவிமர்சையாகக்கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பின் கூட்டம் மாதாமாதம் கூட்டுவது என்றும் பல பள்ளி கல்லூரி , பள்ளிகளுக்குச் சென்று ஆர்வலர்களை திரட்டி அவர்களுக்கும் வரலாற்று அறிவினை ஊட்டுவதோடு அவர்களையும் கலை, பண்பாடு , நாகரிகம், போன்ற வைகளை உணர்வுகளாக ஊட்ட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. தலைவர் பசீர் அலி தன் உரையில் இணையதளத்தில் ஒரு அறிக்கை விடுத்து அதன் மூலமும் ஆதரவு திரட்டவேண்டும். மேலும் அலுவலகமாக இந்த பாலா டிரேடிங் நிறுவனமே முகவரியாக செயல்படும். இதன் மூலம் கடிதங்கள் வரவை நாம் சிறப்பாக செயல் பட முடியும். மேலும் மை ஸ்டாம்ப் என்று மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு நாமும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பதின்மூலம் அரசுக்கு பணவரவு செய்தவராகவும் அதே சமயம் நமது முகத்தில் அஞ்சல் தலை என்பது ஒரு மகிழ்வான த்ருணமாகவும் இருக்கும் என்று கூறினார். ராஜாமுகம்மது தன் உரையில் இதனை இந்த மக்களுக்கு மிகவும் பக்குவமாக கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு இதன் அவசியத்தை உணர்த்தினால் தான் இதன் மூலம் அவர்கள் தங்களையும் தங்களைச் சார்ந்தவர்கலையும் எப்படி வெற்றி கொள்ளவைக்க முடியும் என்று உணருவார்கள் என்று கூறினார். சுவாதிதன் உரையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு கொண்டு செல்லும் போது எதுவும் எளிதில் கைவர பெறும் எனவே பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகள் போன்றவற்றில் நாணயங்கள்பற்றி ஆய்வு செய்ய  பேராசிரியர் மூலமாக விரிவடையச் செய்து பலன் பெற வைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ரமேஷ். ஜலீல்முகம்மது, நூருல்லாஹ், பஹ்ருதீன், கோபாலகிருஷ்ணன்,போன்றோர் கலந்து கொண்டனர். திரு மஸ்தான் பஹ்ருதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.