Tuesday, October 19, 2021

மகிழ்ச்சியான வாழ்க்கை எப்போது சாத்தியம் !!!!

       நாம் ஓடி ஓடி உழைப்பதும்  சேமிப்பதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழத்தான். நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கியே பயனம்தான் என்றால் மிகையாகாது. மகிழ்ச்சியான வாழ்க்கை எப்போது சாத்தியம்    என்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டு சுவராஸ்யமான முடிவுகள் செய்யப்பட்டுள்ளது. வாருங்கள் மகிழ்ச்சியைத் தேடலாம்.
      ‌‌‌சமுதாய உணர்வுகள்,, உறவுகளின் செயல்பாடுகள் ஒருவரின் நல்வாழ்வில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தினார்கள். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று 32 ஆண்டு காலம் 804 பேரின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
       அந்த ஆய்வில் மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குழந்தை பருவத்திற்கு நிறையவே தொடர்பு உள்ளது. குழந்தை பருவத்தில்   அனுபவிக்கும் சூழலே அவர்கள் பெரியவர்கள் ஆளான பின்னும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் எதிரொலிக்கிறது..
       குழந்தை பருவத்தில் குடும்பத்தினர் பாசம் கிடைக்காமல் இருப்பது, ஒத்துழைப்பு இல்லாமல் இருத்தல் மற்றும் உறவுகளின் தொடர்பு இல்லாமல் இருப்பது போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறதாம். அவர்கள் வாழ்க்கை சூழலை நேர்மையாக எதிர் கொள்வது இல்லை என்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கையை தவறவிடுகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
       குழந்தை பருவத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நல்ல தொடர்பு நிலையும், மாணவ பருவத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் சுற்று சமுதாயத்தினர் ஆகியோருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றி பயிற்சி பெறுபவர்களும், இளைஞர் மன்றம் மற்றும் விளையாட்டு குழுக்கள் ஆகியவற்றுடன் நட்புறவுடன் இருப்பவர்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை பெறுகிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
      இத்தகைய சூழலில் வளர்ந்த குழந்தைகளை ஆராய்ந்து பின்னர், குழந்தை மற்றும் வாலிப பருவத்தில் சமுதாயத்துடன் அவர்களுக்கு ஏற்படும் நேர்மறை தொடர்புகளே பிற்கால வாழ்க்கை சூழலை நேர்மறையாக எதிர்கொள்ளவும், மகிழ்சியாக அமைத்துக் கொள்ளவும் உதவுவது . என்று ஆய்வாளர் கிரெய்க் ஓல்சன் தெரிவிக்கிறார்.
     உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமா? உங்களுடன் ஒட்டி வாழ வேண்டுமா இப்போதே அன்பு, பாசம், நேரம் இவற்றை அவர்களுடன் செலவழித்து  இப்பொழுதே அவர்களுடன் உண்மை தன்மையை உணர்வுகளை  பகிர்ந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சுழ்நிலையில் உள்ளோம்.  மகிழ்ச்சியும் தானாகவே அமையும். 
  ‌‌‌‌. நன்றி./ பச்சை ரோஜா/ ஜுன் 2013