புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி அருகில் தெற்கு வாண்டான்விடுதி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை ஐக்கிய நலக்கூட்டமைப்பின் சார்பாக தாரகை ரெடிமேட் மூலமாக ஆயத்த ஆடைகள் வழங்கப்பட்டது
பள்ளியின் தலைமை ஆசிரியர் வே.கீதா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் கு.பிரகாஷ் முன்னிலை, புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பஷீர் அலி தலைமையில். தாரகை நிறுவனர் அல்ஹாஜ். முகமது இக்பால் கலந்துக்கொண்டு ஆரம்ப பள்ளியின் 36 மாணவ மாணவி மற்றும் பள்ளியின் இதர ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக புதிய ஆடைகளை வழங்கினார். இவ்விழாவில் தன்னார்வ தொண்டு நிறுவனர் ராமசாமி, கிராம கல்விக்குழு தலைவர் ம.முருகேசன், பள்ளி மேலான்மை குழுதலைவர் ம.ராதிகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இடைநிலை ஆசிரியர் தா.சண்முகநாதன் அனைவருக்கும் நன்றி பாராட்டி நன்றியுரை வழங்கினார்.