Thursday, October 14, 2021

முதுமக்கள் தாழி / கற்கோடாரி - புதுக்கோட்டை மாவட்டம்

 08.10.19 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மங்களநாடு /மாத்தூர் பாலகிருஷ்ண புரம் அம்பளத்திடல் என்ற கண்மாய்க்குள் 3000 ஆண்டுக்கு முந்திய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. தாழியும் வென்னி மரமும் ஒரு சேர இருந்தால் சங்க காலத்திற்கு முந்திய காலம் என்று இலக்கியம் கூறுகிறது. 

இங்கு கற்கோடாரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பண்டைய காலத்தில் மக்கள் பயன் படுத்திக் கொண்டு இருந்த இந்த கற்கோடாரி மாணவர் திருக்குறள் அரசனால் கண்டு எடுக்கப்பட்டதால் இந்த பகுதிகளில் தமிழ் மக்கள் பண்நெடுங்காலமாக வாழ்ந்ததற்கான அடையாளம் என்று நம்புகிறோம். 

;புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் அ. மணிகண்டன் எடுத்த முயற்சியில் நாமும் நாணயவியல் கழகம் சார்பாக கலந்து கொண்டோம். நன்றி சகோ கஸ்தூரிரங்கன், கரு. ராஜேந்திரன், மஸ்தான் பக்ருதீன் , மரு. மதியழகன் மற்றும் பத்திரிகை நிருபர்கள் பகத்சிங், சுரேஷ் மற்றும் முத்துக்கு நன்றி.