_________________________
" இந்த மாணவர்கள் நம்ம அறிவியல் இயக்க மாநாட்டுக்கு வந்தவங்களா?
" ஆமாங்கய்யா",
"எந்த ஊரு "
"சேலம் பக்கம் மலை வாழ் பகுதி, அரசுப் பள்ளி மாணவர்கள் ங்கய்யா"
"
"சரி, இவங்கள மாதிரி வேற யாராவது மாணவர்கள் இருந்தாலும் எல்லாரையும் கடைக்கு கூட்டி போய் அவங்களுக்கெல்லாம் ட்ரெஸ் எடுத்துக் குடுத்துட்டு எவ்வளவு தொகை வருதுன்னு சொல்லுங்க "
தமிழகம் முழுவதும் டிப்டாப்போடு வந்திருந்த தனியார் பள்ளி அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையில் ... ஆங்காங்கே ஓட்டைவிழுந்த டவுசர்களோடும் பாதிப்பட்டனை இழந்து ஊக்குகளின் உதவியால் தொங்கி கொண்டிருந்த அழுக்கேறி கசங்கிய சட்டைகளோடு இருந்த ஒடுக்கப்பட்டு பின் தங்கியிருந்த மலைவாழ் பகுதியிலிருந்து புதுகை செல்வாவின் முயற்சியால் வந்திருந்த மாணவர்கள் எல்லோரும் அடுத்த நாளே புதிய வண்ண ஆடைகளோடு புன் முருவலாய் வலம் வந்தனர்.
" அய்யா வணக்கம் "
"வணக்கம் சொல்லுங்கய்யா"
" புயல்ல பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் யாருக்கும் தெரியாம ரொம்ப கஷ்டத்துல இருக்குறாங்கய்யா"
"எத்தனை குடும்பம்னு கணக்கெடுத்து இன்று மாலைக்குள்ள சொல்லீட்டீங்கன்னா நாளைக்கி அவங்களுக்கு வேண்டியத குடுத்துரு ே வாங்கய்யா "
" சார் , நா நீலா பேசுறேன்"
"சொல்லுங்கம்மா"
" சார், கணவன இழந்த ஒரு பொண்ணு ரெண்டு குழந்தைகளோட கஷ்டப்படுது "
" அந்தப் பொண்ணுக்கு தையல் தெரியுமா"
"ஆம் தெரியும் சார்"
"சரிம்மா, ஒரு தையல் மிஷின் வாங்கி குடுத்து ருவோம்"
" அய்யா நா ரமா ராமநாதன் பேசுறேன்"
" அய்யா வணக்கம் சொல்லுங்கய்யா"
" கொரானோ கொடுமையில நம்ம நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் ரொம்ப கஷ்டத்துல இருக்குறாங்கய்யா"
" எத்தனை பேருன்னு சொல்லிட்டு வரச் சொல்லுங்கய்யா அவங்களுக்கு வேண்டிய உதவிகள செஞ்சுருவோம்."
" வணக்கம் சார் நா அறிவியல் இயக்கத்துலருந்து மணவாளன் பேசுறேன் "
" அய்யா வணக்கம் சொல்லுங்கய்யா"
" மாணவர்களுக்கு போட்டி நடத்துறோம் . அவங்களுக்கு நினைவுப்பரிசு குடுக்கணும்"
" எத்தனை பேருக்கு என்ன மாதிரியான பரிசுங்கய்யா . சொல்லுங்க குடுத்துருவோம்"
" அய்யா நாந்தான் முத்துநிலவன் பேசுறேன்."
" புத்தகத் திருவிழா நடத்துறோம் . உங்களோட நாணயவியல் கண்காட்சி அவசியம் நடத்தணும். உங்களோட பங்களிப்பு அவசியம் வேணும்"
" நீங்க என்ன சொல்றீங்களோ அவசியம் செய்வோங்கய்யா"
" அய்யா நா எஸ்.ஏ. கே பேசுறேன்."
" அய்யா வணக்கம் "
" நாங்க மாணவர்களுக்கு வாசிப்பரங்கம் நடத்துறோம். நம்ம ஊர் பள்ளியில நடத்தலாமா?"
" தாராளமாய்யா அதுக்கு நா என்னய்யா செய்யனும்"
" கலந்துக்குற மாணவர்களுக்கு பரிசு கொடுக்கணும்... அப்பறம்.........."
"அப்பறம் என்ன மத்தியானம் ஒங்களுக்கெல்லாம் பிரியாணி போட்டுருவோம் போதுமா ?"
மனுசனப் பத்தி எழுத எழுத நமக்குத்தான் கையவலிக்குது. அவரு மனசு வலிக்காம செஞ்சுக்கிட்டே இருக்குறாரு.
மாணவர்களுக்கு உதவி செய்வது நல்ல செயல்பாடுகளில் இயங்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வது அவர்களோடு சேர்ந்து இயங்குவது. தகுதியான ஏழை எளிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்வது என இவரது சேவைப் பணியை எழுத எழுத எழுதிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக 2014 ல் துவங்கப்பட்ட இவது புதுக்கோட்டை நாணயவியல் கழகம் . நூறு கண்காட்சிக்கு மேல் நடத்தியிருக்கிறார். இதுவரை எவ்வளவோ நாணயங்கள் உருவாகி மறைந்திருக்கிறது. மறைந்தநாணயங்களை மீண்டும் பார்ப்பது சாதாரண விசயமல்ல.175 நாட்டு நாணயங்களை சேகரித்து, அதே போல பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான தபால் தலைகளையும் சேகரித்து அதை மாணவர்களும் மக்களும் பார்வையிட்டு பயன் பெரும் வகையில் தொடர்ந்து தனது பயணத்தை கொண்டு செல்கிறார்.
பேச பழக ஒரு தந்தையைப் போல அண்ணனைப் போல நண்பனைப்போல எந்த நேரத்திலும் பிறரது கஷ்டத்தில் பங்கெடுத்து
கைகொடுக்கும் மனிதநேய பண்பாளர். தனது அறுபத்திரெண்டு வயதிலும் இருபத்திரெண்டு வயது இளைஞரைப் போல் செயல்படும் பஷீர் அலி அய்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...