Saturday, March 05, 2022

சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வுக் கூட்டம்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ .

   03/03/ 2022  அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நலத் துறை இயக்குனர் அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    பிறகு மதிப்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்  சுரேஷ் குமார் அவர்கள் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் மூலமாக நடைபெறும் சிறுதொழில் செய்யும் பயனாளிகளை ஆய்வு மேற்கோள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததன் காரணமாக 

   நமது அடப்பன்வயல் சிறு தொழில் மையங்கள் தையல் பயிற்சி நிலையம் இடியப்பம் தயாரித்தல் போன்ற தொழில்களை பார்வையிட்டு  வெகுவாக பாராட்டி சென்றார்கள் .

   புதுக்கோட்டை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கத்திற்கும் 

   மாவட்ட சிறுபான்மை நலத்துறை அரசு அதிகாரிகளுக்கும்              அடப்பன்வயல் ஜமாத் நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி