மூன்றாவது அலையும்
பஷீர் அலி அய்யாவும்
----------------------------------------
மூன்றாவது அலை வருதுன்னு சொன்னாக ஆனா, அது பஷீர் அலி அய்யா மூலமா வருதுன்னு சொல்லாம விட்டுட்டாக.
ஆமா, தன்னோட நாணயவியல் கழகம் சார்பா நமது நாட்டின் 75வது விடுதலை தின அமுதுபெருவிழா சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் தலை, காசுகள் கண்காட்சியின் அலைதான் அது. நான் ஸ்டாப்பா தொடர்ந்து கொண்டு செல்லும் அய்யாவின் கண்காட்சி அலை
வடகாடு தாய்த்தமிழ் பள்ளியில் ராஜா அய்யா ஏற்பாட்டுல நடைபெற்றது...
"மியூசியத்துக்கு மாணவர்களை அழைத்து செல்வது போல அய்யாவின் வீட்டுக்கு நான் எனது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றேன்.
அந்த மாணவர்களை அவர்கள் கொண்டாடிய விதம் காலத்துக்கும் அந்த மாணவர்களால் மறக்க முடியாது" ன்னு நிகழ்வுக்கு தலைமையேற்று வழிகாட்டி தலைமை ஆசிரியர் கருப்பையன் கூறியது முற்றிலும் உண்மைதான்.
" அய்யா வெளிநாட்டுக்கு போயி பணத்த சம்பாரிச்சாரோ இல்லயோ பொக்கிஷமான தபால் தலைகளையும் நாணயங்களையும் சம்பாரிச்சுக்கிட்டு வந்துட்டாரு"ன்னு சுரேஷ் அய்யா சொன்னது எதார்த்தமான ஆழமான வார்த்தைகள்..
" இங்கே இருக்கிற தபால் தலைகளும் நாணயங்களும் எனது வாழ்க்கை சேகரிப்பின் கடந்தகால அடையாளங்களை உங்கள் படிப்புக்கும் பயனுள்ள வகையிலே காட்சிப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக நீங்கள் எந்த விதமான கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். " என பஷீர் அலி அய்யா பார்வையாளர்களை பார்வையிட தூண்டும் வகையில் உற்சாகப்படுத்தி பேசினார்.
பிறகு எல்லாரும் அய்யா காட்சிப்படுத்திய பலங்கால வரலாற்றுக்குள் சென்று விட்டனர். தபால் தலைகள் குறித்தும் நாணயங்கள் குறித்தும் பார்வையாளர்களின் கேள்விகளோடு கலந்துவிட்டார் பஷீர் அலி அய்யா.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் அம்மா அப்பாவுக்கு காண்பிப்பதற்காக மாணவர்கள் தங்களின் போன்களில் போட்டோவும் வீடியோவும் எடுக்கும் போதே தெரிந்தது அவர்களை கண்காட்சி எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்று.
அப்பறம் இடையில ஆரா அய்யா வந்துட்டாரு. சொல்லவா வேணும் கலகலப்புக்கு .பொற்காசுகளையும் நீரை எதிர்த்து பயணம் செய்யும் வேரயும் அப்பறந்தான் ரகசியமா காமிச்சாரு பஷீர் அலி அய்யா. ஆரா ே வரப் பாத்து ஆராய்ச்சியே நடத்திட்டாரு.
அப்பறம் மணி ஒன்னு ஆச்சு. எல்லாரும் மதிய உணவுக்கு தயாராகிட்டாங்க. கூட்டாச் சேந்து கும்பளா உக்காந்து சாப்டுறதே தனி சுகம்தானே...
ராஜா அய்யா ஏற்பாட்டுல மீன் வருவலோட தடபுடல் சாப்பாடு பிரம்மாதமா இருந்துச்சு. எல்லாத்தையும்விட மரவள்ளி கிழங்கு தான் டாப்புன்னு திரும்ப திரும்ப ருசிச்சிட்டாரு ஆரா. அநேகமா மரவள்ளி கிழங்கு குறித்தும் அந்த நீர்ல நீந்திச் செல்லும் வேர் குறித்தும் கவிதை கைவசம் வச்சிருப்பாருன்னு நெனக்கிறேன் ஆரா .
ராஜாவின் பள்ளி வளர்ச்சியில அக்கரையுள்ள அவரது நட்பு வட்டம் உணவுகள்ளருந்து எல்லாத்தையும் பின்னாலிருந்து கவனிச்சுக்கிட்டாங்க...
அப்பறம் ரெண்டு மணிக்கு மேல மீண்டும் உரையாடல் கலை கட்டியது. கண்காட்சிய பார்வையிட்ட மாணவர்களோட உரையாடலை துவங்கினார் அய்யா. பேச தயங்கினவங்களயும் கருப்பையன் சாரு கொஞ்சம் பூஸ்ட் குடுத்து பேச வச்சிட்டாரு.
பேச கொஞ்சம் தயங்கியவங்க அப்பறம் அப்பறம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுல பாரதி ன்னு ஒருத்தரோட விமர்சன பார்வை ரொம்பவே நல்லாருந்தது.
விமர்சனங்களோட கலந்துரையாடிய எல்லா மாணவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கினார் பஷீர் அலி அய்யா.
பஷீர் அலி அய்யா குறித்து ஆராவின் இதயப்பூர்வமான உரை இரண்டு நண்பர்களுக்கும் இன்னும் நெருக்கத்தை கூட்டியது.
" அய்யாவின் இந்த செயல்பாடுகளை அரசு பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் " னு கருப்பையன் சார் சொன்னத எல்லாருமே கை தட்டி வரவேற்றார்கள்.
உண்மைதான் தன்னோட உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தனது மகனையும் இந்த சமூகப் பணியில் இணைத்துக் கொண்டு இந்த சமூகத்திற்காக பல வகையிலும் தன்னோட வாழ்க்கை பயணத்தை கொண்டு செல்லும் பஷீர் அலி அய்யாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இன்னும் கூடுதலாக பல பல பல கைகளை நாம் அவருக்காக தட்ட வேண்டியிருக்கிறது அய்யாவின் செயல்பாடுகளை அரசின் காதுகளுக்கு கொண்டு செல்ல......