இன்று புதுகை வரலாறு செய்திதாளில் நான் எடுத்த பேட்டி வந்துள்ளது படிப்பதற்கு வசதியாக பதிந்துள்ளேன்.
பல புத்தகங்களை வாங்கிய கவிஞர் ரமா.ராமநாதன் கூறியது:
வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது
புத்தகம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாததாக இருக்கிறது. நம்முடன் நம் வாழ்க்கை பயணத்தில் நடந்து வருகிறது.
இன்ப துன்பத்தில் பங்கு பெற்று, நம்பிக்கை விதையை விதைத்து, வாழ்வை செவ்வனே நடத்துவதற்கு பேருதவியாக இருக்கிறது. நமது வாழ்க்கையை மேம்படுத்த அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொடுக்கிறது.
வாழும் முறையை அனுவபத்தின் அடிப்படையில் சொல்லிக்கொடுக்கிறது. நமது கலாச்சாரத்தை, வரலாற்றை அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது. சமூக பொருளாதார சித்தாந்தத்தை, வளர்ச்சிக்கான அரசியலை சொல்லிக்கொடுக்கிறது.
நாம் இன்று அழகாக அச்சிட்டப்பட்ட புத்தகங்களைப் படித்து மகிழ்கின்றோம். இந்த புத்தகங்கள் எப்படி தோன்றின என்பதை பற்றி நாம் சிந்திக்கவேண்டும். பேச்சு வழக்காக மட்டுமே இருந்தவற்றை எல்லாம் எழுதி வைக்கவேண்டும் என்ற எண்ணம் பண்டைய மனிதனுக்கு ஏற்பட்டதே புத்தகத்தின் தோற்றமாக அமைகிறது.
மரப்பட்டைகளிலும், தோல்களிலும் பனையோலைகளிலும், கல்வெட்டுக்களிலும், எழுத்தாணி கொண்டு எழுதி வைத்தவைகள் தான் இன்று புத்தக வடிவம் பெற்றுள்ளது. அறிவியலின் வளர்ச்சியினால் எழுதுவதற்குக் காகிதமும், நூல்கள் அச்சிட அச்சு இயந்திரங்களும் கிடைத்தன. மீக நீளமான சொற்தொடர்கள் சிறு சிறு சொல் தொடர்கள் ஆயின.
ஒரு தொடர்க்கும், அடுத்த தொடர்க்கும் இடையே இடைவெளி விடுவதும், முற்றுப்புள்ளி, போன்றவற்றை அமைப்பதும், பத்தி பிரித்து எழுதுவதும் பழக்கத்திற்கு வந்தன. பெரும் முயற்சியெடுத்துப் படிக்க வேண்டிய நிலை மாறியதனால் படிப்பு பரவலாகியது. புத்தகங்கள் மனிதனின் இயல்புகள், நடத்தைகள், பழக்க வழக்கங்களை படம் பிடித்துக் காட்டுகிறது.
பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற பிரான்சு தேசத்தில் மக்கள் கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்தனர். அவ்வாறு கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களை அகற்ற சிறந்த புத்தகப் படைப்பான சமுதாய ஒப்பந்தம் என்ற மக்களாட்சிக் கருத்துகள் அடங்கிய புத்தகத்தை ரூசோ வெளியிட்டார்.
புத்தகத்தின் தரம், அளவை வைத்து அதைச்சிறப்பானதாக கருத முடியாது. ஜன்ஸ்டீன், ஆடம்ஸ்மித், கோபர்நிகஸ், காரல் மார்கஸ், தாமஸ் பெய்ன், டாய்ஸ்டாய்விஸ்கி, டிகின் லாரன்ஸ், மாக்யவல்லி எனப்பலர் எழுதிய நுர்ல்கள் உலகை உலுக்கியதாகக் கருதப்படுகிறது. இந்திய வரலாற்றில் குப்தர்களின் ஆட்சிக் காலத்தை பொற்காலம் என்கிறோம்.
தொலைக் காட்சி, இணையதளம், கைப்பேசி மோகம் அதிகரித்து விட்டபடியால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்திருப்பதாக ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறு.
புத்தகங்கள் இன்றைக்கும் நிறைய விற்பனையாகின்றன. ஒரு புத்தகத்தை நாம் வாசித்தால், தொடர்ந்து மேலும் பல புத்தங்களை அது வாசிக்க தூண்டும் எந்த ஒரு செயலையும் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்யும்போது அது பண்படாக மாறும்.
கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் தொடர்ந்து படிக்கும் பழக்கம்கொண்டிருப்பவர்கள்தான் நல்ல ஆசிரியராக திகழ முடியும்.
ஆராய்ச்சியாளராக இருந்தாலும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் வைத்திருப்பாவர்கள்தான் நல்ல ஆராய்ச்சிகளை புதுமையாகக் கண்டு பிடிக்க இயலும். படைப்பாளியாக இருந்தாலும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உள்ளவர்கள்;கள்தான் நல்ல படைப்புகளை படைக்கவும் முடியும்.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் நாணயக் கண்காட்சி
இக்கண்காட்சியில் அனைவரையும் ஈர்த்த நாணயங்களின் அணிவகுப்பு.
புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பசீர் அலி கூறியது:
உலகில் உள்ள 175நாடுகளின் பணத்தாள்கள், காசுகள் மற்றும் தபால் தலைகள் என்னுடைய சேகரிப்பாக சேமித்து வைத்துள்ளேன். இதை சேவை மனப்பான்மையோடு பள்ளிக் கூடத்திற்கு கொண்டு சென்று மாணவர்கள் சேமிப்பு அவசியத்தைப் பற்றியும்,
அம்மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து ஊக்கமும் கொடுத்து வருகிறேன்,; இதுவரை 250க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இந்த கண்காட்சியை நடத்தியுள்றோம்;.
எண்ணும், எழுத்தும் தமிழில் பொறிக்கப்பட்ட பணத்தாள்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என்று 8நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பணத்தாள்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இந்தோனிஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ,; சிச்சில்ஸ் போன்ற நாடுகளின் பணத்தாள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளது
அதைப்போல சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து காசுகள், துளுவ நாயக்கர்கள், மராட்டியர்கள், டச்சுக்காசுகள், சிறப்பாக புதுக்கோட்டை அம்மன்காசுகள், பொத்தல் காசுகள்,;
தபால் தலைகள், பல நாட்டு விலங்குகள், பறவைகள். இந்நாட்டில் சிறப்பு தபால்தலைகள், காந்தி தபால்தலை உலகின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட இங்கிலாந்து நாட்டின் தபால் தலை ஆகிய பல்வேறு நாணயங்கள் குறித்த விவரங்கள் இங்கே காணக்கிடைக்கிறது.