Sunday, May 07, 2023

தன்னார்வலர் பசீர் அலி . ஆ.மணிகண்டன் தொல்லியல் கழகம் புகழாரம்.

தன்னார்வத்தின் காரணமாக  உலகின் அனைத்து நாடுகளைச் சார்ந்த காசுகள் மற்றும் பணத்தை சேகரித்து வரும் ஒரு புதுக்கோட்டைக்காரர் ஐயா பசீர் அலி Shaik Dawood Basheer Ali அவர்கள்,
இவர் பழங்கால சேர சோழ பாண்டியர் பல்லவர்களின் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார் இதில் தங்கம் வெள்ளி பித்தளை செப்பு உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்களும் அடக்கம்.

இத்துடன் இந்திய தேசம்  முழுமைக்கும் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்த
மௌரியர்கள் முகலாயர்கள் மராட்டியர்கள் நாயக்கர்கள் உள்ளிட்ட அனைவரின் நாணயங்களும் சேகரிப்பில் உள்ளன...

இவரிடம் உள்ள நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ளது எனினும் சேகரித்து வைத்திருக்கும் நாணயங்களில் எதையும் விற்பனை செய்வதில்லை. இவற்றை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் காட்சிப்படுத்தி வரலாற்று உணர்வை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இவரது தலையாய நோக்கமாக உள்ளது.

எனவேதான் இவர் தனது ஓய்வு நேரத்தில் போதெல்லாம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விழாக்களிலும் தனது சேகரிப்பு நாணயங்களை காட்சிப் படுத்தி வருகிறார் 

அத்துடன் இந்த நாணயம் உருவாக்கப்பட்ட விதம் ஆட்சிசெய்த மன்னர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களையும் விளக்குகிறார்.

இதனால் பலருக்கும் நாணய சேகரிப்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் வரலாற்று தகவல்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இவர் தற்போது புதுக்கோட்டை நாணயவியல் சங்கம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி அதன் நிறுவனர் தலைவராக இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க துன்பப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மிக உயர்ந்த மனிதராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக கடந்த கஜா புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர உதவிகளை செய்ததோடு அவர்களின் வருங்கால வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு உறுதுணையாக தையல் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஒளியேற்றி வருகிறார்...

இத்தகைய புகழையுடைய ஐயா பஷீர் அலி அவர்களை புதுக்கோட்டை மரபு நடைக்கு அன்போடு வரவேற்கிறோம்....

அவரது நாணயம் சேகரிப்பு குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ள உங்களையும் அழைக்கிறோம்....

அன்புடன் அழைப்பது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம்