Saturday, February 03, 2024

வடகாடு தாய் தமிழ் பள்ளியில் மூன்று நாட்கள் பன்முகத்தன்மை கொண்ட கண்காட்சி 28. 1. 24 முதல் 30. 1. 24 .வரை

வடகாடு தாய்த் தமிழ்ப்பள்ளியில் 
உயிர் காக்கும் மூலிகை தாவரங்கள், கீரமங்கலம் மருத்துவர் பவானந்தம் .

 உணர்வை தூண்டும் பழங்கால களை பொருட்கள், புதுக்கோட்டை சு.பீர் முகமது.

 வியப்பூட்டும் அறிவியல் செயல்முறைகள், தாய் தமிழ் போட்டி தேர்வு மாணவர்கள் .

ஊட்டம்  தரும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், வடகாடு மனோன்மணி.

 உயிர்ப்பூட்டும் உலக நாணயங்கள் தபால்தலை பணத்தாள்கள் கண்காட்சி காசிம் புதுப்பேட்டை சே.தா.பசீர் அலி 
மூன்று நாட்கள்  நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வாக அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லா அவர்கள் கண்காட்சிகளை திறந்து வைத்து அவருடன் வருவாய் துறை அலுவலர்கள் பலரும் பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டினார்கள். 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இரண்டாவது நாள் நிகழ்வில் பட்டுக்கோட்டை அறம் அறக்கட்டளை ராமசாமி அவர்கள் அனைத்து கண்காட்சிகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

மூன்றாவது நாள் பொதுப்பணித்துறை ஏடி சுந்தர்ராசு அவர்கள் மூலிகை  தாவரங்கள் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து சந்தோஷப்படுத்தினார்கள்.

 அவரைத் தொடர்ந்து புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறை மண்டல துணை இயக்குனர் பொறுப்பு த. தங்கதுரை அவர்கள் நாணயவியல் கண்காட்சியை திறந்து வைத்து கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் கண்காட்சியின் உடைய தேவையும் சேவையையும் பாராட்டினார்கள் அவருடன் ஓய்வு பெற்ற முதுநிலை விரிவுரையாளர் மு சிவந்த பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
 பள்ளி கல்வித்துறை  வட்டார கல்வி அதிகாரி கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டி எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் கண்காட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

இறுதியாக ஆலங்குடி வட்டாட்சியர் திருமதி பெரியநாயகி அம்மாள் அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து  மூன்று மணி நேரம் பழங்கால கலைப் பொருட்களையும் கண்காட்சியையும் மூலிகை கண்காட்சியையும் அமைதியாக சிறப்பான முறையிலே கண்டுகளித்து அனைவரையும் வாழ்த்தி குடும்பத்தோடு வந்து பார்த்திருக்க வேண்டும் விரைவில் பார்ப்போம் என்று உற்சாகப்படுத்தி சிறப்பான முறையில் பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி விடை பெற்றார்கள்.

 இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த தாய் தமிழ் பள்ளி நிறுவனர் ராஜா அவர்களுக்கும் பள்ளியின் உடைய இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் கிராம கிராம மக்களுக்கும் கரும்பக்காடு பிபிஎம் பள்ளியிலிருந்து வந்து பார்வையிட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மிகுந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கண்காட்சியின் செய்திகளை வெகுவாக கொண்டு சேர்த்த பத்திரிக்கை நிருபர்களுக்கும் தொலைக்காட்சி நிருபர்களுக்கும் மிகுந்த நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம்.