Friday, July 06, 2018

புதுக்கோட்டை ஹசனத்துல் ஜாரியா நடுநிலை பள்ளியில் ( அரசு உதவி பெறும் பள்ளி) வாசிப்பு முகாம் நடைபெற்றது

சாந்தி  (அமைதி) உண்டாகட்டுமாக.  நேற்று 29.6.18 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை தெற்கு 2ஆம் வீதி யில் உள்ள ஹசனத்துல் ஜாரிய நடுநிலை பள்ளியில் ( அரசு  உதவி பெறும் பள்ளி) வாசிப்பு முகாம் நடைபெற்றது. 5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்து சில பக்கங்கள் வாசித்து காட்டி பெற்றோர்களையும், நடுவர்கள் மற்றும் விருந்துனர்களையும் வியக்க வைத்தார்கள். இவ்விழாவிற்கு தாளாளர் முகமது கனி  தலைமை தாங்கினார்,  ஆசிரியர் இளங்கோ  வரவேற்றார்.  நிர்வாகி ராஜ் தாஜ் முகமது முன்னிலை வகித்தார்.  சிறப்பு நடுவராக புதுகை அரசு  உயர் துவக்கப்பள்ளி தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்,  தமுஇச மாவட்ட பொருளாளர் கவிஞர் பீர் முகம்மது பரிசுக்குரிய மாணவர்களை தேர்வு செய்தார் கள்.  விழாவுக்குண்டான  ஏற்பாடுகளை பள்ளி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா செய்து மாணவர்களை மகிழ்ச்சி கடலில் திகைக்க வைத்தனர். மாணவர்கள்     அனைத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகள்  அரசு பள்ளியில்  படித்தால்  வாழ்க்கையில்     வெற்றி பெறுவார்கள் என்று காரியக்காரர் ராஜ்  தாஜ் முகமது பேசியும் மாணவர்களை சோதித்து பரிசு வழங்கியது  அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது . நன்றியுரை தலைமை ஆசிரியர் கூறினார்.  வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ்விற்கு நன்றி..பள்ளியின் நிர்வாகிகள்,  இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பெற்றோர் கள். அனைவருக்கும் நன்றி.