Sunday, October 14, 2018

அஞ்சல் தலையில் அண்ணல் காந்தி 2/150வது கண்காட்சி

வாழ்த்துக்கள் ஐயா. சாந்தி உண்டாகட்டுமாக  புதுக்கோட்டை தெற்கு 2ம் வீதி ஹஸனத்துல் ஜாரிய நடுநிலை பள்ளியில்    12.10.18 வெள்ளிக்கிழமை மாலை மகாத்மா காந்தியின் 2/150வது.  மகாத்மா காந்தியின் பிறந்த ஆண்டை முன்னிட்டு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் முகமது கனி தலைமை தாங்கினார்.  பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தாரகை இக்பால், அ.இ.ச.ந.மகாத்மா காந்தி பேரவையின் நிறுவனர் முனைவர் தினகரன் சிறப்புரை ஆற்றினார்கள்.  ஆசிரியர்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கண்காட்சியை கண்டுகளித்தனர். கண்காட்சியை புதுக்கோட்டை நாணயவியல் கழகம் தலைவர் பசீர் அலி நடத்தினார்.