Wednesday, October 24, 2018

நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தை பேட்டை,புதுக்கோட்டை

சாந்தி உண்டாகட்டுமாக, 22/23.10..18 திங்கட்கிழமை/ செவ்வாய் கிழமை இரண்டு நாட்கள் அஞ்சல் தலையில் அண்ணல் காந்தி கண்காட்சி 7/8/150வது பிறந்த ஆண்டை முன்னிட்டும் சர்வ தேச நூலக தினத்தையும் முன்னிட்டும் சிறப்பானதொரு பள்ளியான புதுக்கோட்டை சந்தை பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்விழாவில் காந்தி பேரவையின் நிறுவனர் முனைவர் தினகரன் சிறப்புரையாற்றினார்.  புதுகை செல்வா மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளியின்  தலைமை ஆசிரியர் விஜய மாணிக்கம் தலைமையில் ஆசிரியர்கள் பொது மக்கள் மாணவர்கள் மிகவும் சந்தோஷமாக பார்த்து மகிழ்ந்ததின் காரணமாக  இரண்டாவது நாள் தொடர்கிறது.  உண்மையில் நான் பெருமை படுகிறேன்.  மாணவர்களின் கேள்வி ஞானமும் ஆசிரியர்களின் சம யோசித அறிவும் இனைவதால் பள்ளியின் ஆபார வளர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்கள்  அனைவருக்கும் நன்றி.  வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கு நன்றி.