Tuesday, November 06, 2018

அஞ்சல் தலையில் தீபாவளி

 அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  இந்த தபால்தலை இந்தியாவும் கனடாவும் இணைந்து கனடா தனிநாடாகி 150 வது ஆண்டு  இந்திய சுதந்திரம் பெற்ற 70 வது ஆண்டை நினைவு கூறும் வகையில்  21.09.17 அன்று இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டு தீபாவளியின் பெருமையை உலகிற்கு தெரிவித்தார்கள். இந்தியாவும் கனடா வும் நீண்ட காலமாக நட்புடன் நடந்து வருகிறது. இரண்டு நாடுகளும் வனிக முதலீடு, அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம், அனு ஆயுதம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் போன்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு  இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டுக்கொண்டுள்ளது.
      உலகத்தில் தமிழர்கள்  எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது.  கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, மொரீஷியஸ், பிரான்ஸ், நேபாளம் மற்றும் ஏராளமான தமிழர்கள்  வாழும் நாடுகளில் வெகு விமரிசையாக தீபத்திருநாளை கொண்டாடுவது பல காலமாக நடந்து வரும் பழக்கம். 
     
       தீபாவளி தினத்தில்  எண்ணெய்  தேய்த்து குளித்து புத்தாடைகள் உடுத்தி பலகாரம் செய்து வண்ண மையமான நாளாக நட்புடன் அண்டை  வீட்டார்களிடம் தோழமையுடன் அன்பு பாராட்டி பலருக்கும் ஜாதி மதம் பாராமல்  கொடுத்து மகிழ்ந்து வாழ்வதே சிறப்பானதொரு தீபாவளி .
        தீபாவளி ( தீபம்+ஒளி)  என்றால் வரிசையாக சேகரித்த அழகான விளக்கு என்று பொருள். இருட்டில் ஒரு தீபத்தை ஏற்றினால் ஒளி உண்டாகுமல்லவா  அது பிறர்க்கு உபயோகமானதாக இருக்கும் அல்லவா  அதுபோல நம்மிலிருந்து  பிறர்க்கும் பிற உயிரினத்திற்க்கும் உபகாரியாக வாழ்ந்து வழி காட்ட வேண்டும்.  தீபத்தை ஏற்ற மூன்று மூலப்பொருட்கள் தேவை. எண்ணெய் + திரி + தி (எண்ணெய் திருத்தி), இந்த மூன்று மூலப்பொருட்கள் இல்லாமல் விளக்கு எரியாது.  உள்ளத்தில் இருளை அகற்ற ஒளி உண்டாக வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் திருத்தி என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.  எண்ணெய் திருத்திக் கொள்கிறேன்.  மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பித்து நம் முன்னோர்கள் எந்த காரணத்திற்காக  தீபாவளியை கொண்டாடினார்களோ  அவர்கள் என்னம் போல நாமும் வெகு விமரிசையாக கொண்டாடுவோம்.