Wednesday, November 07, 2018

மாணவர்கள் கல்வி களப்பயணம்

சாந்தி உண்டாகட்டுமாக புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 35 மாணவர்கள் தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.கருப்பையா மற்றும் சக ஆசிரியர் திரு ரவி சங்கர்உடன் எனது வீட்டில் ஏற்பாடு செய்து இருந்த பணத்தாள், காசுகள் மற்றும் தபால் தலை கண்காட்சியை கண்டுகளித்தனர் மாணவர்களுடன் காசிம் புதுப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தியாகு கலந்துரையாடினார்; மாணவர்கள் கண்காட்சியை பார்த்ததுடன் என்னிடத்தில் கேள்வி கேட்டு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டனர். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி புத்தகம் பரிசுகள் பெற்று சென்றனர்.மூன்று மணி நேரம் மாணவச்செல்வங்களுடன் நேரம் களிந்ததே தெரியவில்லை. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் ஆ கருப்பையா அவர்களுக்கும், அனுமதி வழங்கிய BEO நடராஜன் சார் அவர்களுக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி.