Tuesday, November 13, 2018

தீபாவளி பரிசு பனங்குளம் பள்ளி க்கு....

வண்ண ஆயத்த ஆடைகள்...
"குழந்தைகளது  கனவினை நனவாக்கி கைமேல் பலன் தந்த நிகழ்வு"

எங்கள் பள்ளியில் "புதிய எழுத்தறிவுத்திட்ட தொடக்கவிழா"  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  தலைமையிலும்  மாவட்டம் கல்வி அலுவலர் , வட்டார கல்வி அலுவலர் மற்றும் கல்வியாளர் திரு. மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் 30.10.2018 அன்று நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் பங்கேற்றார்கள்.

புதுக்கோட்டை" தாரகை" ஜவுளி நிறுவன அதிபர் திரு . முகமது இக்பால் அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் தீபாவனிப் பண்டிகைக்கான வண்ணமயமான ஆயத்த ஆடைகளை அன்பளிப்பாக  அளித்தார்கள்.

மாணவர்கள் பள்ளியின் தேவைகளை "மாதிரி கிராமசபைக் கூட்டம் நடத்தி" தீர்மானங்கள் இயற்றி கோரிக்கையாக அனைவர் முன்னிலையிலும் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் அளித்தனர்.  SMC PTA VEC ஆகியோருடன் இணைந்து மாணவர்கள் அளித்த கோரிக்கை மனுவினை களத்திலேயே சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் பரிசீலனை செய்தார்கள்.
குழந்தைகளின் கரங்களிலிருந்து
கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட மறுகணமே
அடிப்படை வசதிகளுக்கான பணிகள் 10 தினங்களுக்குள் தொடங்கப்படும் என்று அகம கிழ்வோடு அறிவித்தார்கள். இதனை கேட்ட கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்வினில் வாழ்த்துரை வழங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தின் நாணயவியல் கழகம் மற்றும் ஐக்கியநலக் கூட்டமைப்பின் தலைவர் திரு.S.D.பஷீர் அலி அவர்கள்  எவரும் எதிர்பார்காத வகையில் வழங்கிய புரவலர் நிதியைத் தொடர்ந்து MLA , தாரகை நிறுவனர் உள்ளிட்ட
பலரும் புரவலராய் இணைந்தது ஆச்சரியமாக அமைந்தது . விழாவில் புரவலர் பற்றிய BE0 அவர்களது கோரிக்கை  இதற்கு அடித்தளமிட்டது.

நிகழ்வின் தலைவராகிய CEO அவர்கள் * எழுத்தறிவின் அவசியம் பற்றியும் * கல்வித்துறை கிராமப் பகுதி மாணவர்களின் தரமான கல்வியினை உறுதி செய்திடவும் பெண் கல்வி மேம்பாட்டிற்கும் மேற்கொ ண்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விளக்கி தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

 முன்னிலை வகித்த DE0 அவர்கள் * அரசுப் பள்ளிகளின் ஒட்டு மொத்த வளர்சிக்கு மக்களது ஒத்துழைப்பின் அவசியம் பற்றியும் * தாரகை நிறுவனத்தின் கொடையாளரை வnழ்த்தியும் *மாணவர் மன்றங்களை தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றினர்கள்

முன்னிலை வகித்த BEO அவர்கள்  * புரவலர் திட்த்தின் நோக்கம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்

கிராமத்தின் அனைத்துக்குடியிருப்பு களைசார்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பங்கேற்று   சிறப்பிதார்கள்.

செய்தி ;- தினத்தந்தி

பணிவுடன் பகிர்வது.
தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள்,
PUMS பனங்குளம் (வடக்கு).