Saturday, November 16, 2019

தபால் தலையில் தமிழ்ச் சான்றோர்கள் கண்காட்சி 11.11.19

"தபால் தலையில்
தமிழ்ச் சான்றோர்கள்"
அஞ்சல் தலை கண்காட்சி...

சுதந்திர இந்தியாவின்
முதல் கல்வி அமைச்சரும்
சுதந்திரப் போராட்டத்
தலைவருமாகிய
மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின்
பிறந்ததினமாம்
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு எங்கள் புதுக்கோட்டை
அரசு உயர் துவக்கப்பள்ளியில்
"தபால் தலையில் தமிழ்ச் சான்றோர்கள்"
என்ற தலைப்பிலான
முதல் அஞ்சல் தலைக் கண்காட்சியினை புதுக்கோட்டை நாணயவியல் கழக மாவட்டத் தலைவர் திரு.S.D.பசீர் அலி அவர்கள் ஏற்பாடு செய்து நடத்தினார்.

கண்காட்சிக்குப் பள்ளித்
தலைமையாசிரியர் திரு.நீ.சிவசக்திவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் திரு.ஹ.மீனாட்சிசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை
வட்டாரக் கல்வி அலுவலர்
திருமதி.பொன்னழகு அவர்கள் முன்னிலை வகித்துக், கண்காட்சியைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த புதுக்கோட்டை நாணயவியல் கழக மாவட்டத் தலைவர் திரு.S.D.பசீர் அலி அவர்கள், கண்காட்சியின் நோக்கம், மத்திய அரசால் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட பெருமைக்குரிய
தமிழ்ச் சான்றோர்கள்
ஆகியன குறித்து
விளக்கிப் பேசினார்.

கண்காட்சியில், திருவள்ளுவர், கம்பர், வ.உ.சி., வேலுநாச்சியார், ராஜாஜி, காமராஜர், பெரியார், பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், டி.எஸ்.செளந்தரம், M.S.சுப்புலட்சுமி,
ஜெமினி கணேசன் என
72க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமைகளுக்கு மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்த
அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியில், புதுக்கோட்டை நகர காவல் நிலைய
துணை ஆய்வாளர் திரு.த.பிரகாஷ்,
திரு.புதுகை செல்வா, திரு.மணிகண்டராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி
கண்காட்சியைப் பார்வையிட்டுச் சிறப்பித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

நிறைவாக ஆசிரியை திருமதி.C.பேச்சியம்மாள் நன்றி
கூறினார்.

திரு S.D.பசீர் அலி அவர்கள் கடந்த ஆண்டில் 'காந்தி 150' பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காந்தியடிகள் குறித்த அஞ்சல் தலைக் கண்காட்சியை முதன் முதலில்
எங்கள் அரசு உயர் துவக்கப்பள்ளியில் நடத்தி, பின் 'காந்தி 150' கண்காட்சியை மாவட்டம் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திரு.S.D.பசீர் அலி அவர்கள், தாம் பல ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ள உள்நாட்டு, வெளிநாட்டு அஞ்சல் தலைகள், உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், பணத்தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு
தொடர் கண்காட்சியினை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல பள்ளிகள், கல்லூரிகள், புத்தகக் கண்காட்சி ஆகிய இடங்களில் நடத்தி சான்றோர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டையும்
பெற்று வருகிறார் என்பது சிறப்புக்குரிய விஷயம்.

மேலும், இவர் எங்கள்
அரசு உயர் துவக்கப்பள்ளியில் தன்னைப் புரவலராகவும் இணைத்துக் கொண்டு எங்களையும் பெருமைப்படுத்தியுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி...

"இன்றுபோல்
என்றும் தொடர்க
அவர் தம்
தன்னலமில்லாத் தொண்டு"