Saturday, November 16, 2019

குழந்தைகள் உணவுத் திருவிழா

குழந்தைகள் உணவுத்திருவிழா

ஹசனத்துல் ஜாரியா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி... தெற்கு 3 ஆம் வீதி புதுகை.

குழந்தைகள் தாங்களே சமைத்து... சமைக்கச்சொல்லி வாங்கி வந்து அசத்தினர்... காடுயாணம்... தினை... கேழ்வரகு...கொள்ளுரசம்... சமைக்காத உணவுகள்... அரபுநாட்டு சுவைகள் என குழந்தைகள் கொண்டு வந்திருந்தனர்... தேர்வுக்குழுவில் மொய்தீன் தோழர்... பசீர் அலி அய்யா... நான் மெதுவாக....

தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கனுமா சார்... ?(குழந்தைகள்ட்ட தரம் பார்ப்பது என் வழக்கமே கிடையாது... கற்றுக்கொள்ளும் போதே தேர்வு வைக்க நாம என்ன அரசாங்கமா) நான் கேட்டதும்... முதல்வரோ

"கலந்துகிட்ட எல்லோருக்குமே பரிசு கொடுத்துருவோம்... குழந்தைகள் பாருங்க..."

ஆகா.... இதுவன்றோ பள்ளிக்கூடம்