அமைதியும் மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாவதாக!!
06.10.2021 புதன் கிழமை புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் அஞ்சல் தலையில் மகாத்மா காந்தி 153வது பிறந்தநாள், தபால் தலை யில் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் சான்றோர்கள் அஞ்சல் தலைகள், காசுகள் மற்றும் உலகளாவிய பயன்பாட்டிலுள்ள பணத்தாள்கள் கண்காட்சி படுத்தப்பட்டது. கல்லூரியின் தாளாளர், நிர்வாகி, ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் கண்டுகளித்தனர்.
கல்லூரியின் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி.
எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே, நன்றிகள்