ஒரத்தநாட்டிலிருந்து ஒரு இஸ்லாமிய சகோதரியின் பதட்டமான குரல் "சார் வணக்கம், அம்மா ரொம்ப முடியாம இருக்காங்க வழக்கமா சாப்பிடுறமாத்திரைகள் இங்கக் கிடைக்கல தஞ்சாவூர்ல மட்டும்தான் கிடைக்கும். நாங்க லேடீசா இருக்கோம் தெருவ வேற கொரோனா இருக்குன்னு அடைச்சுருக்காங்க, எதாவது பன்ன முடியுமா சார்" என்று கேட்க உடன் வாட்சப் மூலம் மாத்திரைகளின் பட்டியலை அனுப்பச் சொல்லி சாரணர் கோபி மூலம் வாங்கியாயிற்று,
இத்தகவலை அவருக்குச் சொல்ல அவரோ சார் இன்னொரு ஹெல்ப் எங்க தெருவுல மூன்று குடும்பங்கள் எந்த உதவியும் இல்லாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்க கஞ்சிக்கு வழி செஞ்சு குடுத்தா போதும் என்றார், இத்தகவலை புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவர் ஐயா பஷீர் அலி Shaik Dawood Basheer Ali அவர்களிடம் சொன்ன மறு நொடியே மறுப்பேதும் கூறாமல் 3000₹ அனுப்புகிறேன் குடும்பத்திற்கு 1000 வீதம் தேவைகளை நிறைவுசெய்துகொடுங்கள் என்றார்
தஞ்சையிலிருந்து அரிசி எடுத்துச் சென்றோம் மளிகைக்கான பணத்தை எங்களை அழைத்த அந்த அங்கன்வாடிப் பணியாளரிடம் தந்து அவர்கள் தேவையறிந்து உதவச் சொல்லி வந்தோம், அவர் இறைவழியில் நடப்பவர் என்பதால் மற்றவர் துயரைத் தன் துயராகப் பார்ப்பவர்,
கொரோனாவின் கோட்டையில் சென்று உதவி செய்து திரும்பியது பெரும் மகிழ்வு,