ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்பை நீர துடைத்து
எனும் குறளுக்கேற்ப வாழ்ந்து வருபவர் நாணயவியல் கழக தலைவர், எழுத்தாளர் S D பஷீர்அலி அவர்கள்.
ஹாஜியார் அரசு பள்ளி மாணவிகளுக்கு உடை வேண்டும் என்றேன் எந்தனை மாணவிகளுக்கு என்றார் முன்னூறு மாணவிகளுக்கு என்றேன் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் சேர்த்தே கொடுத்தார்கள்.
அடுத்து.
ஹாஜியார் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வேண்டும் என்றேன் எத்தனை மாணவிகளுக்கு என்றார் 2000 மாணவிகளுக்கு என்றேன் இரண்டாயிரம் மாணவிகளுக்கும் பாட புக்கை தவிர்த்து அனைத்து நோட்டுகளையும் கொடுத்தார்கள்.
அடுத்து
பொங்கல் விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவிகளுக்கு ஏற்ற உடை அவர்களிடம் இல்லை என்றேன் எத்தனை மாணவிகளுக்கு என்றார் முப்பது மாணவிகளுக்கு என்றேன் உடனே தந்தார்கள்.
இப்படி பல்வேறு உதவிகளை சொல்லிகொண்டே போகலாம்.
எந்த சூழ்நிலையிலும் எந்த உதவி கேட்டாலும் மறுக்காதவர்.
அடுத்த தலைமுறையினரின் பொக்கிஷம்.