Wednesday, October 13, 2021

மரம் நடு விழா நிகழ்வு

அமைதியும் மகிழ்ச்சியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.!!?

23.09.2021.

காலை 10 மணி அளவில்…

ஒருகுடும்பம்  மூன்றுமரம்*

என்ற திட்டத்தின்கீழ் திருவங்குளம் ஊராட்சி பெரியநாயகிபுரம் கிராமத்தில் 

150 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்....

தென்னை..மா...கொய்யா...

ஆகிய மூன்று மரக்குழக்குழந்தைகளை  அவரவர் வீடுகளிலும்...தோட்டங்களிலும்....வைத்து வளர்த்து பயன்பெறுங்கள்...

என்று வழங்கிய நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.....

இந்நிகழ்வுக்கான மரக்குழந்தைகளை அமெரிக்க வாழ் தமிழர்களும்...மற்றும்

இந்தியாவிலேயே வாழக்கூடிய உயர்ந்த உள்ளமும்...பசுமை 

நேசமும் கொண்ட 150 அன்பர்கள் ....

தங்களது பிறந்தநாளான இன்று...கிராம மக்களுக்கு பரிசாக வழங்கினார்கள்......

இதற்கான ஏற்பாடுகளைச்செய்து கொடுத்து உதவிய ஈரோடு 

தா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்....

செப்டம்பர்.23ல் பிறந்தநாள் காணும் 150 

அன்பர்களுக்கும் ....அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு ...நம் மண்ணையும்....

மக்களையும்......மக்களின் நல்வாழ்வையும் சிந்தித்து செயலாற்றும்  

ஒருங்கிணைப்பாளர் .... போற்றுதலுக்குரிய 

ஐயா திரு ஜெய் முத்துகாமாட்சி 

அவர்களுக்கும் ....

நமது நெஞ்சம் நிறைந்த  நன்றிகளையும்..... வாழ்த்துகளையும் ......

மரம் அறக்கட்டளை ........

மற்றும் கிராம மக்கள் சார்பாக 

தெரிவித்துக்கொள்கிறோம்...


சிறப்புவாய்ந்த இந்நிகழ்வை ....தலைமையேற்று துவக்கிவைத்த ....அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் மரியாதைக்குரிய ஐயா 

தனபதி அவர்களுக்கும்...

இல்லாதவர்க்கு உதவுவதே இறைப்பணி என்று 

செயலாற்றி வரும்  புதுக்கோட்டை நாணயவியல் கழகம் நிறுவனத் தலைவர்

பெரும்மதிப்பிற்குரிய 

ஐயா...எஸ்.டி.பஷீர் அலி 

அவர்களுக்கும்.....

இளம் வயதில் இருந்தே  இயற்கைப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வாராப்பூர் ஊராட்சிமன்ற தலைவர்

பசுமைதேசம் சதீஸ்குமார் அவர்களுக்கும் ...

நிகழ்வை முன்னிலை ஏற்று 

முன்னின்று  நடத்திக்கொடுத்த பெரியநாயகிபுரம்  கிராமத்தை மட்டுமல்லாது 

திருவரங்குளம்  ஊராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட  அனைத்துப் பகுதியிலும் 

திறம்பட செயலாற்றிவரும்  பசுமையை வளர்த்தெடுக்கஅரும்பாடுபட்டுவரும்....

ஊராட்சி மன்ற தலைவர் 

திருமதி.மகேஸ்வரி ஆறுமுகம்

 அவர்களுக்கும்..

அவருக்கு பக்கபலமாக 

இருந்து செயலாற்றும்...திரு.ஆறுமுகம் ஐயா 

அவர்களுக்கும்.

பணித்தளப்பொறுப்பாளர்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களாகிய  கிராம மக்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை  சமர்ப்பிக்கின்றோம்....

இந்நிகழ்விற்கான நமது நோக்கம் இயற்கையை மீட்டெடுப்பது

விஷமில்லாத கனிகளை விளைவிப்பது குழந்தைகளுக்குக்கொடுப்பது

தற்சார்பு  பொருளாதாரத்தை  உருவாக்குவது

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவது

பழம்பெருமைவாய்ந்த பண்டமாற்றுமுறைக்கு மக்களை பழக்கப்படுத்துவது....

நல்லிணக்கம் நாட்டில் உருவாக வழி வகுப்பது...

மக்கள் ஒற்றுமையை பலப்படுத்துவது....

பாரம்பரிய மரக்குழந்தைகளை மீட்டெடுப்பது ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்களுக்குள்ளும் இவ்விழாவை கொண்டுசெல்வோம்.

 புதுக்கோட்டையை பசுமைக்கோட்டையாக்குவோம்.....

பசுமைத்தமிழகம் படைத்திடுவோம்.


    நன்றி. 

எல்லா புகழும் இறைவனுக்கே. 

நன்றி மரம் அறக்கட்டளை சகோதரர்கள் வாய்ப்பு வழங்கியதற்கு. நன்றி...