அறம் செய்ய விரும்பும் நிகழ்வு 24.05.20 அன்று
இறைவனின் நாட்டத்தின் பேரில் தன்னால் இயன்றதையும், பிறரது துணையை நாடியும் பெறப்பட்ட உதவிகள் அனைத்தையும் பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது வாய்ப்புள்ள போதெல்லாம் ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி பருவ மாணவ கண்மணிகளுக்கும் வழங்கிவருபவர் கண்ணியமிக்க சமூகசேவகர் திரு.எஸ்.டி. பஷீர்அலி ஆவார்கள்.
கொரோனா பேரிடர்காலத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஈகைத் திருநாள் காலத்தில் வழங்கியுள்ள இந்த நிவாரணம் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.எனவே, ஐயா அவர்களும் அவரது குடும்பத்தார்களும் ஆரோக்கியத்தோடும் வளமோடும் நலமோடும் நீடு வாழ ஆண்டவனை வேண்டி ரமலான் வாழ்த்துக்களோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்....
இந்த அறம்செய விரும்பும் நிகழ்வில் பங்கேற்ற பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் திரு.சடையப்பன், திரு .ஆ. முருகவேல் (சமூக தணிக்கை அலுவலர்) திரு. தாயகம் தமிழரசன் (பட்டதாரி ஆசிரியர்) திரு.தாய்த்தமிழ் ராஜா (கிராம நிர்வாக அலுவலர்) ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்து இதனை அன்புடன் பகிர்வது...
திரு.ரசூல்(சமூக ஆர்வலர்) மற்றும் ஆ.கருப்பையன் தலைமையாசிரியர்.