Sunday, November 07, 2021

கனவு காணுங்கள்!!!!

கனவு காணுங்கள்!
கனவுகளைப் பற்றி ஆளாளுக்கு கதையை வைத்திருக்கிறார்கள்.
'அது ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு என்பர்' சிலர்.

இல்லை இல்லை நமது ஆசைகளின் பிரதிபலிப்பு என்பார்கள் வேறு ,சிலர்

கனவு கடவுள் கொடுக்கும் வரம் அது தீர்க்கதரிசனம் என முரண்டு பிடிப்பார்கள் இன்னும் சிலர்.

கனவுகளைக் குறித்து தெளிவாய் எதுவும் தெரியாததால் தான் கனவுகளும் அவற்றின் பயன்களும் போன்ற நூல்களுக்கு எப்போதும் ஒரு வசீகரம் உண்டு.

யானையை கனவில் கண்டால் வளம் கொழிக்கும் என்றும்,
 பாம்புகளை கனவில் கண்டால் பாலியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும். நாயை கனவு காண்பது நாம் மறந்துபோன எதையோ நினைவுபடுத்துவதாக இருக்கலாம் என்றும் கனவுகளை வைத்து புத்தகம் எழுதி தள்ளுகிறார்கள் பலர் 

கனவு காணும் போது நமது கண்கள் ஆசையும் இதை 'ரெம் ஸ்லீப்' என்பார்கள்
இதைக் கொண்டே நாம் என்ன மாதிரியான கனவு காண்கிறோம் என்பதை கண்டுபிடிக்கலாம் என 1953ஆம் ஆண்டிலேயே அஸெரின்ஸ்கி எனும் விஞ்ஞானி கூறி நம்மை வியக்க வைத்தார். 

கனவுகளில் ஏகப்பட்ட வகை உண்டு ஒரு கனவு காண்பீர்கள் பின் சட்டென விழித்து கொள்வீர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால் மீண்டும் அதே கனவு தொடரும். ஆச்சரியமாய் இருக்கும் இத்தகைய கனவுகளை விஞ்ஞானம் "கன்டினியூவல் ஆக்டிவேஷன்" என்கிறது. 
கனவுகள் குறித்த செய்திகள் எல்லாம் மூளையில் பதிவாகின்றன என்பதே இதன் பொருள் என்கிறார் விஞ்ஞானி ஹாங். 
ஒருவேளை எதிர்காலத்தில் விஞ்ஞானம் நமது கனவை ஒரு சி.டி.யில் ரெக்கார்ட் செய்து நமது கையில் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

பிரிட்டனிலுள்ள ராபின் ராய்ஸ்டன் என்னும் மருத்துவ நிபுணர் மனிதனின் கனவுகளுக்கும் அவனை தாக்க போகும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். 

உதாரணமாக தலைவலியுடன் படுப்பவர்கள் குகைகளில் தவழ்வது போலவோ, சரியான காற்றோட்ட வசதி இல்லாத இடங்களில் தூங்கினால் பயமுறுத்தும் கனவுகளோ, 
சூடான இடத்தில் தூங்குபவர்களுக்கு தீ போன்ற கனவுகள் வருமாம். 

கனவு குறித்த சில தகவல்கள் பிரமிப்பூட்டுபவை
'மெண்டல்' எனும் விஞ்ஞானி புகழ்பெற்ற புகழ்பெற்ற பீரியாடிக் டேபில் ஐ கண்டுபிடித்தவர். 
இவர் இந்த அட்டவணையின் முக்கிய கூறுகளை கனவில் கண்டு பிடித்ததாகவும் அது சரியாக இருந்ததாகவும் ரஷ்ய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார். 
இப்படி அடுக்கடுக்காய் தொடரும் கனவு  வியப்புகளில் புதிதாக சேர்ந்து இருக்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று கனவுகள் மன அழுத்தத்தை குறைக்கின்றன என்பது தான். இது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின் முடிவு. 

மன அழுத்தமான சூழலில் தூங்கச் செல்லும் போது கனவில் உணர்ச்சிகரமான காட்சிகள் வரக்கூடும் ஆனால் அவையெல்லாம் உண்மையில் மன அழுத்தத்தை குறைகின்றன . 
மன அழுத்தத்தைத் தூண்டும் நியூரோ கெமிக்கல்ஸ் இத்தகைய கனவுகளினால் வீரியம் இழக்கின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி. 
ஒருவகையில் உணர்ச்சிபூர்வமான சூழலில் இருப்பவர்கள் உடைய வலிமிகுந்த உணர்வுகளை கொஞ்சம் இயல்பாக்கும் வேலையை கனவுகள் செய்கின்றன என இந்த ஆராய்ச்சி சொல்கிறது. 
ஆனால் பி.டி.எஸ்டி எனப்படும் அதீத அதிர்ச்சி சூழலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கனவுகள் இதம் அளிக்கும் வாய்ப்பு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது. 

எல்ஸ் வான் டெர் ஹம் தலைமையிலான இந்த ஆராய்ச்சியில் 35 இளம் வயதினர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான பல படங்களை காண்பித்து அவருடைய தூக்கத்தின் நிலையை ஆராய்ந்தனர்
பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதியில் தான் இந்த முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. 

அப்புறம் என்ன கனவு காணுங்கள் 'கனவு காணுங்கள்' என்று மேனாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது கவனிக்கத்தக்கது.    
                     
 அவனை நோக்கித் திரும்புங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! (தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகள் ஆகிவிட்ட)
இணை கற்ப்பித்தோரில்  ஆகிவிடாதீர்கள் .
( திருக்குர்ஆன் 30: 31)

கனவின் பலன் எதிர்மறையானதல்ல
(8: 43,12:36 ,37 , 12:43 ,47  12:100 48:27.)

நபிமார்களின் கனவுகளும் இறை செய்தியே (37:103-105)

கனவின் விளக்கம் இறைவன் புறத்தில் உள்ளது  (12:37)