Sunday, December 05, 2021

செயல் மிகு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தொழுகையை ஒத்தி வைத்த 
காசிம் புதுப்பேட்டை மக்கள் ....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
என்ன பாக்குறீங்க . இஸ்லாத்துலயே ரொம்ப ரொம்ப முக்கியமானது தொழுகை நடத்துறது. எவ்வளவு பெரிய வேலன்னாலும் தொழுகைய முடிச்சுட்டுதான் பிறகு வேலைய 
பாப்பாக. ஆனா, அந்த தொழுகைய
ஒத்தி வைக்கிற அளவுக்கு அப்டி என்ன நடந்தது....
அதுதான், கல்விக்கான கூட்டம்....
ஆமா, காசிம் புதுப்பேட்ட பள்ளியில உள்ள பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அது. கூட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளயும் நம்ம பஷீர் அலி அய்யாதான் ரொம்ப சிறப்பா பள்ளிவாசல் வளாகத்துல ஏற்பாடு செஞ்சிருந்தாரு . அவரு அழச்சா தட்ட முடியுமா...? எல்லாருமே வந்து அரங்கம் முழுதும் நிரம்பியாச்சு, எங்களோட சேத்து மக்கள் கூட்டமும்.... 
மாநில அளவில் ஆசிரியர்களில் சிறந்த கல்வியாளரா விளங்கக் கூடிய நெடுவாசல் கருப்பையன் அவர்கள்  கூட்டத்த ஒருங்கிணச்சு  நடத்தினார். 
கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அந்த கூட்டத்த புகைப்படம் ஒளிப்படம் எடுத்தவரின் தகவல்களையும் சேர்த்து எல்லோரையும் பற்றியும் அவரது உரையாடல் வெகு சிறப்பு....
 இயந்திர தனமான சில வேலகளுக்கு மத்தியில , அறிவியல் இயக்க வேளாண் விஞ்ஞானி ராஜ்குமார்  கலந்து கொண்டு பேசுனது அவருக்கும் மக்களுக்கும் நெகிழ்வாவே இருந்தது. 
"பள்ளிக்காக பள்ளிவாசலயே கொடுத்து கூட்டம் நடத்துற நீங்கள் உயர்வானவர்கள் " என்ற அறிவியல் இயக்க சதாசிவத்தின் வார்த்தைகள் உண்மையானது.  
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வாழ்நாள் போராட்டத்தை நடத்தும் ஒளிப்பதிவாளர்  செல்வா, அப்பறம் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஜமாத் கமிட்டி தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் அப்பறம் ரொம்ப ரொம்ப முக்கியமா பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் அதிகமானோர் கலந்து கொண்டது ரொம்ப ரொம்ப சிறப்பு.  

பள்ளியில் படித்த பழைய மாணவர்களின் உணர்ச்சிகரமான நெகிழ்வான பேச்சு மனச தொட்டுருச்சு. அப்பறம் பெண்கள் பகுதியிலருந்து மூன்று நான்கு பேர் பள்ளிக்கு தேவையான நல்ல ஆலோசனைகளை சொன்னது அனைவரையும் கவர்ந்தது....
மதியச் சாப்பாடு நேரம்  தாண்டியும் ஒரு ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களும்,  ஆலோசனைகளும்  நடந்து கொண்டே இருந்தது....

எல்லாம் நல்லபடியா முடிந்து பஷீர் அலி அய்யா வீட்ல , அம்மா சமைச்ச அசத்தலான பிரியாணி சாப்பாடோட "அடுத்த கூட்டம் எப்ப நடத்துறீங்க"   ன்னு கேட்டு விடைபெற்றோம்....

ஆமா, சொல்ல மறந்துட்டேன் பாருங்க ...
கூட்டம் நடக்கும் போது, மதியம் தொழுகை நேரம் வந்ததும்  "தொழுகை நேரத்த கொஞ்சம் தள்ளி வைக்கலாமா" என பஷீர் அலி அய்யா ஜாமாத் கமிட்டி தலைவர்கிட்ட  கேட்டபோது, 
"நம்ம ஊரு பள்ளிக்கூட வளர்ச்சிக்காக நடக்குற கூட்டம் . கல்வியவிட  தொழுகை முக்கியமில்ல. கடவுளுக்கானத அப்பறம் செய்வோம்  கல்விக்கானத இப்ப செய்வோம்..." னு சொல்லி தொழுகைய தள்ளி வச்சு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காசிம் புதுப்பேட்ட மக்கள் உண்மையிலேயே சிறந்த பண்பாளர்கள் ... அவர்கள பாராட்ட வார்த்தைகளே இல்ல.....

ஆதலால்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் முதன்முதலாக கூறிய வார்த்தையே ‘ஓதுவீராக’ எனும் கல்வி கற்பது குறித்துதான்...

"வணக்க வழிபாடுகளில் இருக்கும் மோகத்தை விட கல்வி கற்பதிலும், அதை கற்பிப்பதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும் " நபிகள் நாயகம்.