ஆசிரியர்களே !
பள்ளி நிர்வாகிகளே !
இதை முழுமையாக படியுங்க
#தஞ்சாவூர் மாவட்டம், #பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் #செயல்மிகு #பள்ளி #மேலாண்மைக் #குழு #நிர்வாக #ஆலோசனைக் கூட்டம் 16.12.2021 வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் #ஒருங்கினைந்த #பள்ளிக் #கல்வி #மாநில #திட்ட #இயக்குனர் மாண்புமிகு , #சுதன் #இ.#ஆ.#ப அவர்களும், #இல்லம் #தேடி #கல்வித் #திட்ட #சிறப்பு அலுவலர் மாண்புமிகு ,#இளம்பகவத் #இ.#ஆ.#ப அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் உயர்திரு #திராவிடச்செல்வம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
செயல்மிகு பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தினை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்திவரும் #ஆற்றல்மிகு #செயல்வீரர் #தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டி திரு.#கருப்பையன் தலைமை ஆசிரியர் அவர்கள்
( பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளி )
சிறப்பாக வழிநடத்தினார்கள்.
என்னையும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்பினையும் வழங்கினார்கள். ( நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ) மேலும்
இ.ஆ.ப ஆட்சியாளர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பல ஆசிரியர்களையும் வாழ்த்தி புத்தகம் தந்து பாராட்டினார்கள்.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மாண்புமிகு , சுதன் இ.ஆ.ப அவர்கள், ,#இளம்பகவத் இ.ஆ..ப. அவர்களும் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்திருந்து #பள்ளி #மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடம் கூட்டங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை அவர்கள் அமர்ந்துள்ள இடங்களுக்கு சென்று வினாக்கள் கேட்டு பதிலைப் பெற்று மேலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்தினையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
ஆட்சியாளர்கள்
கேட்டாங்க... கேட்டாங்க ...
என்னென்ன ....கேட்டாங்க .. தெரியுமா ?
கேட்ட வினாக்கள் சில ......
1. மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறுகிறதா?
மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் பங்கேற்கிறீர்களா ?
சென்ற கூட்டத்தில் எத்தனை நபர்கள் பங்கேற்றாங்க ?
முந்தைய கூட்டம் எப்போது நடந்தது ?
கூட்டத்திற்கு எப்படி தகவல் தருவாங்க ?
நீங்கள் கூட்ட நோட்டில் கையெழுத்து போட்டிங்களா?
உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை நபர்கள்?
2. கூட்டத்தில் எது தொடர்பாக பேசுவீர்கள் ?
என்ன செயல்திட்டம் தீர்மாணிப்பீர்கள்?
தீர்மாணத்தை செயல்படுத்த யாரையெல்லாம் பார்த்து கேட்களாம் ?
3. உங்கள் பிள்ளைகள் இங்கு படிக்கிறார்களா ?
அவர்களின் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது ?
அவர்களின் கல்வித் தரத்தின் மேம்பாட்டை எப்படி தெரிந்து கொண்டீர்கள் ?
ஆசிரியரிடம் நேரில் பேசினீங்களா ?
படிக்கும் பள்ளியை தேர்வு செய்தது யார் ?
4. ப.மே.கூட்டத்தில் நீங்கள் பேசியிருக்கிறீர்களா?
என்ன பேசினீங்க ?
சமூகத் தனிக்கை என்றால் என்ன?
5. பள்ளியில் சீறுடை தாராங்களா ?
ஆண்டுக்கு எத்தனை தாராங்க ?
என்னென்ன தாராங்க ?
நீங்க பேசுவதெல்லாம் உண்மையா ? பொய்யா?
6. கல்விக்காக ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்ரீங்க ?
என்னென்ன செலவு ?
உங்கள் குழந்தை எங்கே மதிய உணவு சாப்பிடராங்க ?
பள்ளியில் ஏன் சாப்பிடவில்லை ?
போன்ற நிறைய கேள்விகள் கேட்டாங்க உறுப்பினர்கள் பதிலும சொன்னாங்க! எல்லாம் உண்மையா கேட்ட போது கொஞ்சம் பொய்யும் உள்ளது என்றும் கூறியதும் அனைவரின் சிரிப்பையும் பெற்றது.
இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் மாண்புமிகு ,இளம்பகவத் இ.ஆ.ப அவர்களும் சில கேள்விகள் கேட்டதோடு நிறைய ஆலோசனைகள் தந்து வழிகாட்டினாங்க....
பள்ளி வேலை நேரம் முடிந்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு வாராங்க ? வீட்டிலிருந்து எத்தனை மணிக்கு பள்ளிக்கு செல்றாங்க ? காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்காங்க ?
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் நடைபெரும் பயிற்சி இடத்திற்கு செல்றாங்களா ?
விருப்பத்தோடு செல்றாங்களா ? இல்லை நீங்க கட்டாயப்படுத்தினீங்களா ?
உங்கள் ஊரில் எங்கே நடைபெறுகிறது ? பாடம் நடத்துறவங்க என்ன படித்து இருக்காங்க ?
ஆர்வத்தோடு கற்கும் இடமாகத்தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் அமைந்துள்ளது.
ஆடல் , பாடல் , விளையாட்டு போன்ற முறையில் தான் கற்றல் செயல்பாடுகள் உள்ளது. அதை தெரிந்து கொண்டீர்களா ? என்றும் கேட்டார்.
பள்ளி கூட்டங்களில் முதலில்
இருக்கும் நிலையினை ஆய்வு செய்தபின் இல்லாத நிலையை கடைசியில்தான் விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை கூடுதல் விளக்கத்துடன் தெரிவித்தார்கள். உதாரணமாக.......
இருக்கும் பொருட்கள், அதன் பயன்பாடு, மாணவர்களின் கல்வித்தரம், அவற்றின் மேம்பாடு , ஆசிரியர்களின் சிறப்பு , மாணவர்களின் ஒழுங்கு , சுகாதாரம் , சுற்றுப்புறத் தூய்மை, பள்ளி கட்டமைப்பு, பாதுகாப்பு , நூலகத்தின் செயல்பாடு, எவ்வளவு புத்தகம் உள்ளது? எத்தனை புத்தகத்தினை ஒவ்வொரு மாணவர்களும் படித்துள்ளார்கள் இவற்றின் மீதுதான் முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் இல்லாதது எது? தேவையானது எது ? எப்படி பெறவேண்டும் ? என்பதை தீர்மாணிக்க வேண்டும்.அதை பெற உரிவர்களை அனுக வேண்டும்
என்று விளக்கமாக உரையாற்றினார்கள்.
இதுபோல் செயல்பட்டால் பள்ளிகளின் தரம் மேம்படும் என்ற கருத்தினை மக்கள் முனுமுனுப்போடு கூட்டம் நிறைவடைந்து.
கூட்ட வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை நாணயவியல் மாவட்டத் தலைவர் பஷீர் அலி யாகிய என்னுடைய நாணயவியல் கண்காட்சியும் ஆட்சியாளர் கள் இருவரும், மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் பார்வையிட்டார்கள். எல்லா பள்ளிகளிலும் கண்காட்சியாக நடத்தி மாணவர்கள் பார்வையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். கூட்டத்தில் பங்கேற்றவர்களும், மாணவர்கள் பலரும் பார்வையிட்டார்கள். சிலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.
கூட்டம் மனநிறைவோடு நிறவுற்றது.
பள்ளியில் அனைவருக்கும் இனிப்பு , முந்திரி , பேருச்சம்பழம் , காரம், காப்பியும் தந்து உபசரித்தார்கள் நன்றி கூறி விடைபெற்றோம்.
நன்றி,
நிகழ்வுகளை செவியால் படம் பிடித்து உள்ளார்ந்து தொகுத்து எழுதிய செரியலூர் ஆசிரியர் இரா. அன்பரசன் அவர்களுக்கும், வழி காட்டும் தலைமை ஆசிரியர் அ.கருப்பையா அவர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் அனைவருக்கும் கரம்பயம் பள்ளி மேலாண்மை குழுவிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.