Friday, December 17, 2021

அருங்காட்சியகத்தில் நாணயவியல் கழகம் சார்பாக கண்காட்சி

"அமைதியும் மகிழ்ச்சியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!
"இந்தியா 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு சுதந்திர தியாகிகளின் அஞ்சல் தலை கண்காட்சி." 
14/12/21 மற்றும் 15/12/21 அன்று
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அருங்காட்சியகம் காப்பாச்சியர் (பொருப்பு) திரு பக்கிரி சாமி அவர்கள் தலைமையில் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் 75 வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் 75 வாரங்கள் "அம்ரித் மஹாஉத்சவ் " என்று நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி நமது அருங்காட்சியகத்தில் நாணயவியல் கழகம் சார்பாக கண்காட்சி காசுகள் மற்றும் அஞ்சல் தலையில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு படுத்தும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி தமிழ் நாட்டிற்கு வருகை தந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைவு கூறும் வகையில் சிறப்பு அஞ்சல் கவர் அரசால் போடப்பட்டதும் ஜீவா,  ம.பொ.சி, திருப்பூர் குமரன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பகத் சிங், பக்ருதீன் அலி அஹமது, பாரதியார், வ.உ.சிதம்பரம், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, கான் அப்துல் கபார் கான் மற்றும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் வில்லை அவர்களின் வரலாற்றுவுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தது மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. 
காசுகளில் இந்திய அரசு வெளியிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் காசுகளும், சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து காசுகள், மராத்தி, மைசூர், ஹைதராபாத் நிஜாம், தஞ்சை நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆற்காடு நவாப் போன்ற குறுநில மன்னர்கள் காசுகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது சிறப்பு. 
கண்காட்சி ஏற்பாடுகளை புதுகை நாணயவியல் கழகம் நிறுவனத் தலைவர் எஸ்.டி.பசீர் அலி சிறப்பாகவும் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அழகான முறையில் பதில்கள் கூறினார்கள்.
அரசு அருங்காட்சியக நிர்வாகத்தினர்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.