அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய
தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக தபால்தலை, பணத்தாள்
மற்றும் நாணயங்கள் கண்காட்சி கழகத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.டி. பசீர் அலி உடைய சேமிப்புகளை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியை பள்ளியின் தாளாளர், முதல்வர்
சுரேஷ் துவக்கிவைத்தார். இக்கண்காட்சியை செலக்சன் பள்ளியின் மாணவர்களும், சுற்றியுள்ள கிராமங்களின் அரசுப் பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பார்த்து பயனடைந்தார்கள்.
கண்காட்சியில்
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்
நாணயவியல் கழகத்தை சேர்ந்த அறந்தாங்கி வழக்கறிஞர் திரவியம், மொய்தீன்
மற்றும் அபுதாகிர் கலந்துகொண்டார்கள்
No comments:
Post a Comment