Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Saturday, October 16, 2021

உலக தென்னை தினம்

 இன்று செப்டம்பர் 2, உலக தென்னை தின நல்வாழ்த்துக்கள்.

      எனது ஊர் நாடறிந்த இயற்கை விவசாயியும், கீரமங்கலம் நக்கீரர் தென்னை விவசாயிகள் சங்கம் நிர்வாகியுமாகிய வே. காமராசர் அவர்களால் இன்றைய சிறப்பான நாளை முன்னிட்டு தென்னங்கனறு வழங்கிய கையால் வீட்டில் தென்னங்கன்று நட்டு தந்தார்கள். நன்றி. நன்றி....

     பேரக்குழந்தைகள்  கையால் மா மற்றும் பிலா கன்றுகள்  நடப்பட்டது.

     கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வர மனதில்லாமல் இருந்த எண்ணை விதைக் கலாம்  அமைப்பும் மாப்பிள்ளை காமராசும்   உத்வேகம் கொடுக்க  திரும்ப தொடங்கியாட்சு.

    பிலா கன்றுகள் ‌வழங்கிய அணவயல் பொன்னம்பலம் மற்றும் அணவயல்  ஒன்றியம் முருகேசன் அவர்களுக்கும் நன்றிகள் ..                           பேரக்குழந்தைகளுக்கும் நன்றி.

    எல்லா புகழும் இறைவனுக்கே.

பு

Monday, January 30, 2017

2017ம் ஆண்டு பொங்கல் விழா

2017ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மூன்று அரசுப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்புப் பள்ளியின்  மாணவ மாணவிகளுக்கு 260 இலவச வண்ண ஆயத்த ஆடைகள்  வழங்கப்பட்டது.

அரையப்பட்டி




பிள்ளையார்பட்டி




கொன்னையூர்



களமாவூர் மலர்ச்சி சிறப்புப் பள்ளி





Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை புத்தக திருவிழா – 2016 - நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி


புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற புத்தக திருவிழா புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக 30-11-2016 முதல் 04-12-2016 வரை தபால்தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.


     கண்காட்சியில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.

       

Monday, October 10, 2016

68 அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...
சிலநாட்களுக்கு முன் அன்புடன் ,சகோதரி நல்லாருக்கீங்களா..கொஞ்சம் அலுவலகத்துக்கு வர்றீங்களா..என்று அழைத்த போது கூட இப்படி எதிர்பார்க்கவில்லை..அலுவலகம் நிறைந்த புத்தாடைகளைக்காட்டி உங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புதிய ஆடைகள் வழங்க நினைக்கின்றேன்...என்று எவ்ளோ வேணும்னு கேட்ட போது மலைத்தே போனேன்...ஒரு 50 குழந்தைக்கு கொடுக்க முடியுமா அண்ணா என்றேன்..எவ்ளோ வேணுமோ எடுத்துக்குங்கம்மா என்றார்..இன்று 68 குழந்தைகளுக்கு ரூ 50,000 மதிப்புள்ள ஆடைகளை மாணவிகளுக்கு மனம் நிறைய வழங்கி மகிழ்ந்தார்.
இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கவிஞர் முத்துநிலவன் அண்ணாவும் கலந்து கொண்டதைக்காண கண் கோடி வேண்டும்..நன்றி அண்ணாஸ்..
புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் இன்று [6.10.16] மாலை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வண்ணஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சங்கத்தின் மாநில உறுப்பினரான திருமிகு முத்துநிலவன் அவர்களும் திருமிகு ஏ.ஆர்.எம் அப்துல்லாஹ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் திருமிகு இரவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையாசிரியர் திருமிகு கோ.அமுதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து தலைமையுரை ஆற்றினார்.
புதுக்கோட்டை ஐக்கியநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு பஷீர் அலி அவர்கள்..மாணவர்களுக்கு சேவை செய்வதன் அவசியத்தைக்கூறி மேலும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகக் கூறிய பொழுது மாணவிகள் கரவொலியால் தங்களது மகிழ்வைத் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமிகு ஏ.ஆர்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் தங்களது சகோதரிகள் இப்பள்ளியின் முன்னால் மாணவிகள் என்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகக்கூறியது அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.
கவிஞர் முத்துநிலவன் அவர்கள். மாணவிகளுக்கு புதிய வண்ண ஆடைகளை வழங்கிய போது அவர்கள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. மேலும் அவர் தனது சிறப்புரையில் பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல..அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்துமே அறிவாகும்...பெண்கள் எதற்கும் துணிவுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற வேண்டும்.சமூக சூழ்நிலை உங்கள் கல்விக்கு இடையூறு தந்தாலும் கல்வியில் முன்னேறி வெற்றி பெறுவதே வாழ்வின் இலட்சியமாகும் ..மதிப்பெண்கள் மட்டும் கல்வியில்லை...நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதும் முக்கியமான ஒன்றாகும் என மாணவிகள் மகிழும் படி சிறப்பானதொரு உரையாற்றினார்.
தமிழாசிரியர் கிருஷ்ணவேணி அவர்கள் அனைவருக்கும் கவிதை நடையில் நன்றி பாராட்டி நன்றியுரை கூறினார்.
முதுகலைத்தமிழாசிரியர் திருமிகு பரமசிவம் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
பள்ளிக்கு மேலும் பல உதவிகளை செய்து தருவதாகக்கூறி திருமிகு பஷீர் அலி அவர்கள் கூறிய போது இவர்களைப்போன்ற கொடையாளிகளால் அரசுப்பள்ளிகள் வளம் பெறுகின்றது என பள்ளியின் ஆசிரியர்கள் கூறி மகிழ்ந்தனர்.


Monday, September 19, 2016

பெரியார் பிறந்தநாளில் வண்ண ஆடைகள் வழங்கும் விழா
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவிகள் அனைவருக்கும் புதிய ஆயத்த ஆடைகள் புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மீனாட்சிசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன், கவிஞர் கீதா, புதுகை செல்வா, கவிஞர்.மீரா செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். டி. பசீர் அலி  66 மாணவிகளுக்கு ஆயத்த ஆடைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கும்போது முயற்சி உடையோருக்கே எல்லாம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்ட, நூறு ரூபாய் பணத்தைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என கேட்டார். மாணவர்கள் தயங்க, பின் அவர்களை ஊக்கமூட்டி உடனே முன்வந்த மாணவிக்கு சட்டென்று உனக்குதான் இந்த பணம் என்ன செய்ய போகிறாய் என்று பசீர் அலி அவர்கள் கேட்க இதை நான் உண்டியலில் சேர்த்து வைப்பேன் என்று அந்த மாணவி கூறி வியப்பூட்டினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியர் பேச்சியம்மாள் நன்றியுரை வழங்கினார். ஐக்கிய நலக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் K நூருல்லாஹ், மொய்தீன், பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, ராமதிலகம், நிர்மலா, பவுலின் ஜெயராணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 



அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக தபால்தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி கழகத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.டி. பசீர் அலி உடைய சேமிப்புகளை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியை பள்ளியின் தாளாளர், முதல்வர் சுரேஷ் துவக்கிவைத்தார். இக்கண்காட்சியை செலக்சன் பள்ளியின் மாணவர்களும், சுற்றியுள்ள கிராமங்களின் அரசுப் பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பார்த்து பயனடைந்தார்கள்.
கண்காட்சியில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாணயவியல் கழகத்தை சேர்ந்த அறந்தாங்கி வழக்கறிஞர்  திரவியம், மொய்தீன் மற்றும் அபுதாகிர் கலந்துகொண்டார்கள்

Saturday, August 20, 2016

அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி 16,17 ஆகஸ்ட் 2016


அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16,17/08/2016 செவ்வாய் புதன் ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இக்கண்காட்சிக்கு கல்லூரியின் நிறுவனர் N.முகமது பாருக் அவர்கள் தலைமையேற்றார், முதல்வர் K. கமர்ஜஹான் அனைவரையும் வரவேற்றார், கல்லூரியின் அறங்காவலர்கள் P. நைனா முகமது NS. நைனா முகமது K. நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நாணயவியல் கழக நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.டி. பசீர் அலி அவர்கள் இக்கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களிடம் இந்திய திருநாட்டின் கலாச்சரம், பண்பாடு குறித்து சொற்பொழிவாற்றினார். மேலும் மாணவர்களிடம் வினாடி வினா கேள்விகள் கேட்டு பரிசுகளை வழங்கினார்.
 இக்கண்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. சங்கு, வண்ணத்து பூச்சி, பறவைகள், ஊர்வன, அழிந்துபோன விலங்குகள், தற்கால விலங்குகள் என 125 நாடுகளின் தபால்தலைகள் காட்சிபடுத்தப்பட்டது.
நாணயங்களில் சேரர், சோழ, பாண்டியர் நாணயங்களும், கேரள காவடி நாணயங்களும், திருவாங்கூர் சமஸ்தான நாணயங்கள், குப்த நாணயங்கள், ஜெய்பூர் நாணயங்கள், மராட்டிய மன்னர்களின் நாணயங்கள், மதுரை நாயக்கர்களின் நாணயங்கள், ஐதராபாத் நிஜாம் நாணயங்கள், திப்பு சுல்தான் நாணயங்கள், ஈஸ்ட் இந்தியன் கம்பெனி, பிரிட்டிஸ் ராஜ்ஜிய நாணயங்கள், வெள்ளி, பித்தளை, வெங்கல நாணயங்கள் சுதந்திரத்திற்க்குப்பின் இந்திய தலை சிறந்த தலைவர்கள், முன்னால் பயன்பாட்டில் இருந்த அலுமினிய நாணயங்கள் மற்றும் உலக நாடுகளின் நாணயங்கள் வரை கண்காட்சியில் இடம் பெற்றது.
பணத்தாள்கள்
150 நாடுகளின் பணத்தாள்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாட்டின் பணத்தாள்களும் அந்தந்த நாட்டின் வரைபட விளக்கத்துடன் காட்சிபடுத்தப்பட்டு இருந்ததால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இறுதியில் கல்லூரியின் நிர்வாக அலுவலர் மாரிச்சாமி நன்றி கூறினார்.

இக்கண்காட்சியை நைனா முகமது கல்வியியல் கல்லூரி மாணவர்களும், கிரசண்ட் மேல்நிலை பள்ளி மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் கண்டுகளித்து விழிப்புணர்வு பெற்றனர்.சேமிப்பு பழக்கங்கள் கடைபிடிக்க தன்முனைப்பு காட்டினர். புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தை சார்ந்த வழக்கறிஞர் திரவியம், பெரியசாமி, அபுதாகிர் மற்றும் ஏறாலமானோர் கலந்துகொண்டனர்.