திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தால்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்து, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், கமலக்கண்ணன், சந்திரசேகரன், அரிஸ்டோ உள்ளிட்டோர் முன்னிலையில் புதுகை நாணயவியல் கழகத் தலைவர் ஷேக் தாவூத் நாணய சேகரிப்புக்கலை மூலம் நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற வரலாற்று பதிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்தமையை பாராட்டி பாரம்பரிய காவலர் கௌரவ விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு மாநில, மாவட்ட சேகரிப்புக்கலை கலைஞர்கள் பங்கேற்றனர்.
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா
Showing posts with label நாணய கண்காட்சி. Show all posts
Showing posts with label நாணய கண்காட்சி. Show all posts
Monday, September 23, 2024
திருச்சி பணத்தாள் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நாணயம் தபால்தலை பணத்தால் கண்காட்சி 20/ 9/ 24 முதல் 22/ 9/ 24 வரை நடைபெற்ற திருச்சியில் நடைபெற்றது.
புதுகை நாணயவியல் கழக தலைவருக்கு கௌரவ விருது!
Friday, December 17, 2021
அருங்காட்சியகத்தில் நாணயவியல் கழகம் சார்பாக கண்காட்சி
"அமைதியும் மகிழ்ச்சியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!
"இந்தியா 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு சுதந்திர தியாகிகளின் அஞ்சல் தலை கண்காட்சி."
14/12/21 மற்றும் 15/12/21 அன்று
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அருங்காட்சியகம் காப்பாச்சியர் (பொருப்பு) திரு பக்கிரி சாமி அவர்கள் தலைமையில் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் 75 வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் 75 வாரங்கள் "அம்ரித் மஹாஉத்சவ் " என்று நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி நமது அருங்காட்சியகத்தில் நாணயவியல் கழகம் சார்பாக கண்காட்சி காசுகள் மற்றும் அஞ்சல் தலையில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு படுத்தும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி தமிழ் நாட்டிற்கு வருகை தந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைவு கூறும் வகையில் சிறப்பு அஞ்சல் கவர் அரசால் போடப்பட்டதும் ஜீவா, ம.பொ.சி, திருப்பூர் குமரன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பகத் சிங், பக்ருதீன் அலி அஹமது, பாரதியார், வ.உ.சிதம்பரம், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, கான் அப்துல் கபார் கான் மற்றும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் வில்லை அவர்களின் வரலாற்றுவுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தது மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
காசுகளில் இந்திய அரசு வெளியிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் காசுகளும், சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து காசுகள், மராத்தி, மைசூர், ஹைதராபாத் நிஜாம், தஞ்சை நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆற்காடு நவாப் போன்ற குறுநில மன்னர்கள் காசுகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது சிறப்பு.
கண்காட்சி ஏற்பாடுகளை புதுகை நாணயவியல் கழகம் நிறுவனத் தலைவர் எஸ்.டி.பசீர் அலி சிறப்பாகவும் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அழகான முறையில் பதில்கள் கூறினார்கள்.
Saturday, November 27, 2021
புத்தக திருவிழாவில் நாணயவியல் கண்காட்சி.
26.11.17 நேற்று புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சியில் மேனாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு நெல்லை சு.முத்து அவர்கள். புதுக்கோட்டை கணினி சங்கத்தின் நிர்வாகிகள். பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றி தோழர்கள் கண்டு தெரிந்து கொண்ட நல்லுறவுகளுக்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு.
Subscribe to:
Posts (Atom)