Monday, September 23, 2024

திருச்சி பணத்தாள் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நாணயம் தபால்தலை பணத்தால் கண்காட்சி 20/ 9/ 24 முதல் 22/ 9/ 24 வரை நடைபெற்ற திருச்சியில் நடைபெற்றது.

புதுகை நாணயவியல் கழக தலைவருக்கு கௌரவ விருது! 

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தால்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்து, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், கமலக்கண்ணன், சந்திரசேகரன், அரிஸ்டோ உள்ளிட்டோர் முன்னிலையில் புதுகை நாணயவியல் கழகத் தலைவர் ஷேக் தாவூத் நாணய சேகரிப்புக்கலை மூலம் நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற வரலாற்று பதிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்தமையை பாராட்டி பாரம்பரிய காவலர் கௌரவ விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு மாநில, மாவட்ட சேகரிப்புக்கலை கலைஞர்கள் பங்கேற்றனர்.

Monday, March 04, 2024

17/18-02-24 திருச்சி குளித்தலையில் நாணய கண்காட்சி.

அனைவரின் மீதும் அமைதி உண்டாகட்டுமாக.

 இன்று 17/02/24  திருச்சி மாவட்டம் குளித்தலை வை புதூரில் உள்ள செயின்ட்  டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியில் 

பராம்பரிய கிராமத்துத் திருவிழா

பல் பொருள்  அங்காடிகள்,

பழங்கால கலை பொருட்களின் கண்காட்சி ,

நாணயம் தபால் தலை மற்றும் பணத்தாள்கள் கண்காட்சி,

 மூலிகை கண்காட்சி ,

பழங்கால அரிசி நவதானிய கண்காட்சி ,

பொம்மலாட்டம் ,

சானை பிடித்தல்,
 
மண் பாண்டம் செய்தல் ,

கயர் தயாரித்தல் ,

ஜவ்வு மிட்டாய், மற்றும் 
 
பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட குடிசை வீடுகள்.

 இவை அனைத்தும் ஒரே இடத்தில் பள்ளியின் உடைய விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் பள்ளியின் உடைய தாளாளர் திரு. எமர்சன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மற்றும் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் பல பள்ளிகளில் இருந்து வந்திருந்து கண்காட்சியை கண்டு களித்த மாணவச் செல்வங்கள் ஆசிரியர்கள்

 பள்ளியின் வட்டார கல்வி அதிகாரி முனைவர் இரா. ஜெயலட்சுமி அம்மா அவர்கள் அனைவருக்கும் மிக உற்சாகமான  வரவேற்பு அளித்து பாராட்டி மிகச் சிறப்பான முறையில் பங்களித்தார்கள். 
நன்றி.
 பள்ளிக்கும் பள்ளியின் உடைய தாளாளருக்கும் பள்ளியின் உடைய ஆசிரிய பெருமக்களுக்கும் .நன்றி..
 எல்லா புகழும் இறைவனுக்கே.

2023-24 காசிம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா.

அமைதி உண்டாகட்டுமாக !!

நேற்று 20/ 2 /24 
காசிம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் ஆண்டு விழா நடைபெற்றது.

 விழாவிற்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி  அலுவலர் பெருமதிப்பிற்குரிய கூ. சண்முகம் அவர்கள் தலைமையில் கணினி திறன் வகுப்பு தொடங்கி வைத்து ஆண்டு விழாவில் தலைமை தாங்கி ‌சிறப்புரை  நிகழ்த்தினார்கள்.
 மாவட்ட கல்வி துறைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
கீரமங்கலம் பேரூராட்சி தலைவர்,
 செரியலூர் இனாம் ஊராட்சி தலைவர் மற்றும் ஜமாஅத் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், விழாவின் வெற்றிக்கு முழு முதல் காரணமாக விளங்கிய வார்டு கவுன்சிலர் அவர்களுக்கும்,
 சிறப்பான ஏற்பாடு செய்த இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும், பள்ளி மேலாண்மை குழுவிற்கும் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ....
எல்லா புகழும் இறைவனுக்கே

Saturday, February 03, 2024

வடகாடு தாய் தமிழ் பள்ளியில் மூன்று நாட்கள் பன்முகத்தன்மை கொண்ட கண்காட்சி 28. 1. 24 முதல் 30. 1. 24 .வரை

வடகாடு தாய்த் தமிழ்ப்பள்ளியில் 
உயிர் காக்கும் மூலிகை தாவரங்கள், கீரமங்கலம் மருத்துவர் பவானந்தம் .

 உணர்வை தூண்டும் பழங்கால களை பொருட்கள், புதுக்கோட்டை சு.பீர் முகமது.

 வியப்பூட்டும் அறிவியல் செயல்முறைகள், தாய் தமிழ் போட்டி தேர்வு மாணவர்கள் .

ஊட்டம்  தரும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், வடகாடு மனோன்மணி.

 உயிர்ப்பூட்டும் உலக நாணயங்கள் தபால்தலை பணத்தாள்கள் கண்காட்சி காசிம் புதுப்பேட்டை சே.தா.பசீர் அலி 
மூன்று நாட்கள்  நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வாக அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லா அவர்கள் கண்காட்சிகளை திறந்து வைத்து அவருடன் வருவாய் துறை அலுவலர்கள் பலரும் பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டினார்கள். 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இரண்டாவது நாள் நிகழ்வில் பட்டுக்கோட்டை அறம் அறக்கட்டளை ராமசாமி அவர்கள் அனைத்து கண்காட்சிகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

மூன்றாவது நாள் பொதுப்பணித்துறை ஏடி சுந்தர்ராசு அவர்கள் மூலிகை  தாவரங்கள் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து சந்தோஷப்படுத்தினார்கள்.

 அவரைத் தொடர்ந்து புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறை மண்டல துணை இயக்குனர் பொறுப்பு த. தங்கதுரை அவர்கள் நாணயவியல் கண்காட்சியை திறந்து வைத்து கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் கண்காட்சியின் உடைய தேவையும் சேவையையும் பாராட்டினார்கள் அவருடன் ஓய்வு பெற்ற முதுநிலை விரிவுரையாளர் மு சிவந்த பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
 பள்ளி கல்வித்துறை  வட்டார கல்வி அதிகாரி கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டி எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் கண்காட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

இறுதியாக ஆலங்குடி வட்டாட்சியர் திருமதி பெரியநாயகி அம்மாள் அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து  மூன்று மணி நேரம் பழங்கால கலைப் பொருட்களையும் கண்காட்சியையும் மூலிகை கண்காட்சியையும் அமைதியாக சிறப்பான முறையிலே கண்டுகளித்து அனைவரையும் வாழ்த்தி குடும்பத்தோடு வந்து பார்த்திருக்க வேண்டும் விரைவில் பார்ப்போம் என்று உற்சாகப்படுத்தி சிறப்பான முறையில் பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி விடை பெற்றார்கள்.

 இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த தாய் தமிழ் பள்ளி நிறுவனர் ராஜா அவர்களுக்கும் பள்ளியின் உடைய இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் கிராம கிராம மக்களுக்கும் கரும்பக்காடு பிபிஎம் பள்ளியிலிருந்து வந்து பார்வையிட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மிகுந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கண்காட்சியின் செய்திகளை வெகுவாக கொண்டு சேர்த்த பத்திரிக்கை நிருபர்களுக்கும் தொலைக்காட்சி நிருபர்களுக்கும் மிகுந்த நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, January 09, 2024

காசிம் புதுப்பேட்டை. ஊ.ஒ.ந.பள்ளி மாணவர்கள் "ஞானக் கருவூலகம்" களப்பயணம். 09/01/2023

#அறிவுப்பசிதேடி.....
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஆறு, ஏழு மற்றும்  எட்டாம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள்  களப்பயணமாக காசிம்புதுப்பேட்டை  திரு. Shaik Dawood Basheer Ali  அவர்கள் சமீபத்தில் தொடங்கிய "#ஞானக்_கருவூலகம்" என்ற நூலகத்திற்குச் சென்றோம்.

பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி. செந்தில்வடிவு அவர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்கள், இளங்கோ மற்றும் தியாகு ஆசிரியர்  ஆகியோர் களப்பயண ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

நூலக பார்வையிடல் செய்வதற்காக வந்திருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்ற நூலகத்தின் நிறுவனர் திரு பஷீர் அலி இளமைப் பருவத்தில் இருந்து தான் பல நூல்களை  சேகரித்து நூலகம் உருவாக்கிய விதத்தை விளக்கிய விதம் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தான் சேகரித்து வைத்திருந்த #பழங்கால_நாணயங்கள், #தபால்_தலைகள் போன்றவற்றை மாணவர்களுக்கு காண்பித்து உரிய விளக்கம் அளித்தார்.

அவரது விளக்கத்தினை குறிப்பெடுத்துக் கொண்ட மாணவர்கள் நூலகத்தில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 
கதைகள்,சிறுகதைகள் வரலாறு,அரசியல்,மொழி, இலக்கியம், பண்பாடு , தொன்மை, சிறுவர் இதழ்கள், அறிவியல் புதினங்கள் போன்ற பல வகையான புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் எடுத்து வாசித்து மகிழ்ந்தனர்.

தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்ட மாணவர்கள் நூலகப் பார்வையிடலின் போது தாங்கள் கண்டு,கேட்டு ரசித்தவற்றை கவனமுடன் குறிப்பெடுத்துக் கொண்டு தங்களுக்குள் ஏற்பட்ட பலவிதமான ஐயங்களை திரு. பஷீர் அலியிடம்  கேட்டுத் தெளிவு பெற்றனர்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை எடுத்து 
சுமார் ஒரு மணிநேரம் வாசித்தனர். பின்னர் தாங்கள் வாசித்த
புத்தகத்தின் எழுத்தாளர், வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர், புத்தகத்தின் தலைப்பு, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் மற்றும் முக்கிய கருத்துக்கள் போன்றவற்றை குறிப்பெடுத்து கொண்டனர். 

களப்பயணம் மேற்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் , திரு பசீர் அலி அவர்களை கடலை மிட்டாய் வழங்கி உபசரித்தார். இறுதியாக மாணவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனி, துரித உணவுகளின் கேடுகள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாணவர்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் அருமை.

நிறைவாக களப் பயணத்திற்காக தனது நூலகத்தை பார்வையிட உதவிய திரு பஷீர் அலி அவர்களுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றி தெரிவித்து மீண்டும் மீண்டும் நூலகத்திற்கு வருவதாகக் கூறி இனிதே விடைபெற்றனர்.