இது நிகழ்ச்சி நிரலில் இல்லாத
ஒரு மகிழ்ச்சி......
பார்த்துக்கொண்டுதான்
இருந்தோம்.....
ஆரக்கால்களாய்
குழுக்கள் சுழன்றன.
அது
அச்சாணி ஒன்று நச்சென்று
அமைந்த
மாயம்
காற்புள்ளி என்கேனும்
காணாமல் போனால்
இவருக்கு
ராப்பள்ளி இருக்காது.
சிலருக்கு காலை 5மணிக்கு
விடியும்..
இவருக்கு அப்போது தான்
முதல் நாள் முடியும், (இவர் நிலவு தானே)
பதிவுகளைப் பாருங்கள்
நள்ளிரவு 12
அதிகாலை 3.30
விடிகாலை 5.. (முத்து முத்தாக...)
வியக்க ஒன்றுமில்லை
இரவென்பது
நிலவுக்குரியதுதானே..
இந்த விழா எங்களாலும்
நடந்திருக்கலாம்...
ஆனால் உங்களால் தான்
நடந்தது......
-மீரா செல்வகுமார்,
செயளர், நாணயவியல் கழகம்,
புதுகை.
No comments:
Post a Comment