மாட்சிமை தங்கிய
மன்னர் கல்லூரியில், ”புதுகையைப்
போற்றுவோம்” எனும் தலைப்பில், புதுக்கோட்டை
சமஸ்தானம் சுதந்திர இந்தியாவுடன் இணைந்த நாள் (03/03/1948-03/03/2016)
கொண்டாடப்பட்டது. இவ்விழாவை நடத்திய
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் வரலாற்றுத் துறை, புதுக்கோட்டை
வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்துடன் இணைந்து புதுக்கோட்டை நாணயவியல் கழகம்
பழங்கால நாணயம், பணத்தாள் மற்றும்
அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
இவ்விழாவை கல்லூரி முதல்வர், வரலாற்றுத்துறை தலைவர் முனைவர்.மீ.வீரப்பன் தலைமையேற்றார், கவிஞர். மு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு மையத் தலைவர் முனைவர்.ஜே .ராஜா முகம்மது அறிமுக உரையாற்றினார், புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு மையச் செயலாளர்,கரு. இராஜேந்திரன், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர். சி சேதுராமன்,உடற்கல்வித்துறைத் இணை பேராசிரியர். ஆ.சி. நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கண்காட்சியை கல்லூரி முதல்வர் வீரப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நாணயவியல் கழக தலைவர். எஸ்.டி. பசீர் அலி , நாணய கண்காட்சியின் அறிமுக உரையாற்றினார்..
No comments:
Post a Comment