Thursday, July 05, 2018

முக்கண்ணாமலைப்பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி

சாந்தி உண்டாகட்டுமாக.  10.03.18 அன்று  புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல்  ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காசுகள்,   பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.  பள்ளியின் தாளாளர் மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி தலைமை தாங்கினார்.  பள்ளியின் முதல்வர் ரானிஜான் முன்னிலையில் கண்காட்சி நடைபெற்றது.  ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். கண்காட்சியைப்பற்றிய பத்திரிகை செய்திகள் வெளியீடு செய்து தந்த நிருபர் தம்பி சாதிக் அவர்களுக்கும், பள்ளியின் தாளாளர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர்களுக்கும் மற்றும்  எல்லா வல்ல  இறைவனுக்கும் நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி