நிறைய பேருக்கு வீடு கட்டலானு பெருசா திட்டம் லா போட்டோம் ஆனா நிதி பற்றாக்குறை தொடர்ந்து பணி செய்ய முடியாம இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலைனு நிறைய பிரச்சனைகள் அதனால அந்த திட்டம் கைவிடப்பட்டாலும்...
இவங்களுக்கு கண்டிப்பா உதவி செஞ்சே ஆகனும் அப்படிங்குற நபர்கள தேர்ந்தேடுத்து நிறைய பேரோட உதவில கட்டி முடிச்சுருக்க 3வீடு இது...
புயல் வந்துப்ப முழுசா வீட இழந்துட்டாங்க அதுக்கப்பறம் தங்குறது எல்லாம் எப்படியோ பக்கத்து வீடுகள்ள சாமாளிச்சுட்டு இருந்துருக்காங்க
கணவர் கூட இல்ல கஷ்ட்டபட்டு குழந்தைகள இவங்க தான் வளக்குறாங்க அதே வீட்ல கூரை கொஞ்சம் சரி பண்ணிட்டு எங்கயோ கடன் 30ஆயிரம் வாங்கி வீடு கட்டலானு மார்ச் மாசம் இருந்துருக்காங்க மின் கசிவு ஏற்பட்டு வீடு மொத்தமா எரிஞ்சு போச்சு அந்த நெருப்பு 30000 பணத்தையும் விட்டு வைக்கல...
ராமசாமி தோழர் இவங்கள தெரிஞ்சுகிட்டு எப்படியாச்சும் வீடு கட்டி கூடுக்கனும்னு புதுகை செல்வா தோழர்ட்ட அறிவுறுத்தி... அதுக்கு ஒரு திட்டம் போட்டு நிறைய பேருக்கிட்ட உதவி கேட்டு இப்ப பல நிதிநெருகடிகள சமாளிச்சு ஒரு வழியா வீடு கடைசி கட்டத்துல வந்து நிக்கிது...
இதுக்கு பெரிய உதவி செஞ்சது
Shaik Dawood Basheer Ali அப்பா
Surya Raja சிங்கப்பூர் வாழ் நண்பர்கள்
Bravetitans Baskar அன்னவாசல்
அவங்களுக்கு நிதி நெருகடிகனால பெருசா ஒன்னும் கட்டிகூடுக்க முடிலனாலும் அவங்க இருந்த பழைய வீடோட இது கண்டிப்பா அப்டேட்டு வெர்சன் தான் எதோ எங்களால முடிஞ்சது...
சிக்கீரம் பால் காய்ச்சுவோம் எல்லாரும் வந்துருங்க
#Home3
துனைவன்💞
பிரபாகரன் புரட்சி விதைகள் 🔥
வீரா தமிழன்