15 /10/ 23 அன்று பெருந்தகை மாமனிதர் மேனாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை வடகாடு தாய்த்தமிழ் பள்ளி வடகாடு போட்டித் தேர்வு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா ராசி. பன்னீர் செல்வம் அவர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தின் வடிவமைப்புகளை விளக்கி 1951 வரை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டது,
யார் யாரெல்லாம் அதற்கு பாடுபட்டார்கள்,
எந்தெந்த ஆண்டுகள் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றது போன்ற எண்ணற்ற விளக்கங்களை மாணவர்களுக்கு எடுத்து புள்ளி விவரத்தோடு மிக அருமையாக எல்லோருக்கும் புரியும்படி வகுப்பு எடுத்தார்கள். அருமை
அந்த வகுப்பிற்கு முன்னால் என்னையும் அறிமுக உரையை நிகழ்த்த தாய்த்தமிழ் பள்ளி வடகாடு நிர்வாகி ராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாமும் அதில் கலந்து கொண்டோம். என்னைப் போலவே புதுக்கோட்டை நகர கிளைச் செயலாளர் கவிஞர் பீர்முகமது அவர்களும் கலந்து கொண்டு சிற்றுரை நிகழ்த்தினார்கள். மாணவர்களுக்கும் தாய் தமிழ் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் உலக மாணவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறப்பு விருந்தினராக அறிவொளி S. A. கருப்பையா அவர்கள் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து தந்தார்கள்.