என்ற வாக்கியத்தின் சொந்தக்காரர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று வடகாடு தாய் தமிழ் பள்ளியின் குழந்தை தினம். குழந்தைகள் தினத்தை மாணவர்களின் மாறுவேட போட்டியில் சிறப்பாக நடத்தினார்கள், அதில் நாமும் பங்குபெற்று மாணவர்களுடன் கொண்டாடினோம். பள்ளியின் நிர்வாகிகளுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்களை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து வடகாடு புள்ளாட்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை குழந்தைகள் நல மருத்துவர் மனிதநேய மாண்பாளர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வேடங்களுடன் அவர்களைப் போன்று பேசி மக்களின் பாராட்டை பெற்றார்கள். இந்த விழாவை இவ்வளவு சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ் இந்து நிருபர் தோழர் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவொளி கருப்பையா அவர்கள் சிறப்பாக பேசி புகைப்படம் எடுத்து தந்தார்கள் நன்றி.